மஞ்சள் என்றாலே அனைவருக்கும் தெரியும் மஞ்சள் அரைத்து உணவுகளுக்கு பயன்படுத்தும் ஒரு மருத்துவ பொருளாக இருக்கிறது பெரும்பாலும் பெண்கள் தன் சருமத்தை அழகாக காட்டுவதற்காக குளிப்பதற்கு முன் தன் முகத்தில் மஞ்சளை பூசி கொள்வார்கள். மஞ்சளில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் இருந்தாலும் ஒரு சில நோய்கள் இருப்பவர்கள் மஞ்சளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மஞ்சளில் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளதால் அதை அதிக அளவு பயன்படுத்தலாம் என்று பயன்படுத்தக் கூடாது தேவையான அளவு மட்டும் தான் அஞ்சலை பயன்படுத்த வேண்டும்.
உலகத்தில் மிக கொடிய நோய் என்றால் சர்க்கரை நோய் தான் அந்த நோய் வந்தால் காலத்திற்கும் மாத்திரை மருந்து என்று காலம் அழிந்துவிடும் அவ்வாறு ரத்தத்தில் சர்க்கரை இருப்பவர்கள் மஞ்சளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் மஞ்சளை பயன்படுத்தினால் நீரிழிவு நோய் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.
கல்லீரல் மற்றும் இரைப்பை உணவு குழாயில் பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சளை அதிக அளவு சேர்த்துக் கொள்ளக் கூடாது முடிந்த அளவு மஞ்சளை தவிர்ப்பது நல்லது.
பித்தப்பையில் பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சளை குறைந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் முடிந்த அளவு மஞ்சளை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.