தடுப்பூசி முழு விளக்கம் | Dpt Vaccine In Tamil
Dpt Vaccine In Tamil:வணக்கம் நண்பர்களே.!! பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்திலிருந்து குழந்தை பிறந்து குழந்தை வளரும் வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனையில் எங்கு குழந்தை பிறந்தாலும் குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளுக்கான கால அட்டவணைகள் வழங்கப்படும் அதன்படி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது மிகவும் நல்லது.
தடுப்பூசி போடுவதன் மூலம் குழந்தைகள் பெரியவர்களாக ஆகி வரும் நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு தான் குழந்தை பருவத்திலே தடுப்பூசி போடப்படுகிறது அதனால் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது மிகவும் கட்டாயமான ஒன்றாகும்.
Dpt Vaccine
குழந்தை பிறந்ததிலிருந்து தடுப்பூசி போடாமல் விட்டால் கக்குவான் இருமல் போன்ற நோய்கள் வந்துவிடும் கக்குவான் இருமல் என்பது குழந்தை இருமல் தொடங்கினால் தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் வரை இறுமுவதை நிப்பாட்டாமல் இருக்கும் இது போன்ற நோய்கள் எதுவும் வராமல் இருப்பதற்கு தான் குழந்தை பிறந்ததில் இருந்து கால அட்டவணைகள் கொடுக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்ட வருகிறது.
கக்குவான் இருமல் மட்டுமில்லாமல் தொண்டைய அடிப்பான்,பாக்டீரியா போன்ற பல நோய்கள் குழந்தைகளுக்கு வரும் இது போன்ற நோய்களிலிருந்து விடுபட தான் தடுப்பூசிகள் போடப்படுகிறது அதனால் கால அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது போல குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது மிகவும் நல்லது.
Dpt vaccine age
குழந்தை பிறந்ததிலிருந்து தடுப்பூசி போட வேண்டும் அதாவது குழந்தை பிறந்து சரியாக 2 மாதத்தில் ஒரு தடுப்பூசியும்,4மாதத்தில் ஒரு தடுப்பூசியும் 6 மாதத்தில் ஒரு தடுப்பூசியும்,15 அல்லது 18 மாதங்கள் கழித்து ஒரு தடுப்பூசியும்,அதன் பிறகு 4 வயதில் ஒரு தடுப்பூசியும் 6 வயதில் ஒரு தடுப்பூசி என குழந்தை பிறந்ததிலிருந்து போட வேண்டும்.
குழந்தைகள் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா என்றால் அது கிடையாது பெரியவர்களுக்கும் தடுப்பூசி இருக்கிறது. நோய் பரவுவதை தடுப்பதற்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் தடுப்பூசிகள் போடப்படுகிறது அதனால் குழந்தைகள் மட்டும்தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைக்காமல் பெரியோர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Read Also:
மயோசைட்டிஸ் | Myositis In Tamil
மலர் மருந்துகள் கிடைக்கும் இடம்
எச்சில் விழுங்கும் போது தொண்டை வலி