நாமக்கல் மாவட்டம் என்றாலே முட்டை மற்றும் கோழி பண்ணை தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். நாமக்கல் மாவட்டத்திலிருந்து தான் பல மாவட்டங்களுக்கு முட்டை கொள்முதல் ஆகி வருகிறது. தினசரி முட்டையின் விலை ஏற்றம் இரக்கமாக இருந்து வந்தது கடந்த 5 நாட்களில் மட்டும் 50 காசுகள் முட்டை விலை குறைந்து உள்ளது. நேற்று 5 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்பட்ட முட்டையின் விலை இன்று 20 காசுகள் குறைக்கப்பட்ட 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நேற்று நடைபெற்ற நாமக்கல் முட்டை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முட்டையின் விலை அதிரடியாக குறைத்துள்ளனர்.
பல்லடத்தில் நடத்தப்பட்ட கறிக்கோழி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கறிக்கோழியின் விலையை 106 ரூபாயிலிருந்து 4 ரூபாய் குறைக்கப்பட்டு 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.முட்டைக்கோழியின் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.