நாமக்கல் மாவட்டம் என்றாலே முட்டையும் கோழி பண்ணையும் பேமஸான ஒன்றாகும். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 5 நாட்களாக முட்டையின் விலை குறைக்கப்பட்டு வந்தது இன்று ஆறாவது நாளாக முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை முட்டையின் விலை 5 ரூபாய் விற்கப்பட்டு வந்தது. தொடர்ந்து 6வது நாளாக நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முட்டை விலையை 30 காசுகள் என்று குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை 5 ரூபாய்க்கு விக்கப்பட்டு வந்த முட்டையின் விலை இன்று ரூ.4.70 காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது.வட மாநிலங்களில் பண்டிகைகள் நடைபெற்று வருவதால் அங்கு முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள முட்டை கொள்முதல் ஆகாமல் இருந்து வருகிறது. எனவே நாளுக்கு நாள் முட்டையின் விலையை தமிழகத்திலும் குறைக்கப்பட்டு வருகிறது.