பெண் மார்பக புற்றுநோய் அறிகுறிகள் | Female breast cancer symptoms
மார்பக புற்றுநோய் என்பதை பெண்களுக்கு வரும் புற்று நோய்களில் ஒன்றாகும்.மார்பக புற்றுநோய் என்பது மார்பக திசுக்களில் ஆரம்பிக்கும் புற்று நோய்களை குறிக்கிறது.இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் உள்ளடக்குகளில் தோன்றுகின்றது.நாளங்களின் உருவாகும் புற்று நோய்களுக்கு நாள புற்றுநோய் என்று பெயர் உள்ளது.அதனை போல் நுண்ணறைகளில் ஏற்படும் புற்று நோய்களுக்கு நுண்ணறி தீவிர புற்றுநோய் என்று பெயர் இருக்கிறது.மார்பக புற்று நோய்களில் பல வகை நிலைகள் இருக்கின்றது.
மார்பக புற்றுநோய் வர காரணம்
மார்பக புற்றுநோய் பரம்பரை பரம்பரையாக வரலாம் அல்லது வயது கடந்து திருமணம் செய்வதாலும் மார்பக புற்று நோய் வரலாம்.35 வயதிற்கு மேல் குழந்தை பெற்றால் மார்பக புற்றுநோய் ஏற்படும்.தாய்ப்பால் தராமல் இருந்தால் கூட மார்பக புற்று நோய் ஏற்படும்.மேலும் வாழ்க்கை முறை மாற்றம் சுற்றுச்சூழல் மாசு போன்ற பல காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.
பெண் மார்பக புற்றுநோய் அறிகுறிகள்
பெண் மார்பக புற்றுநோய் ஏற்படும் பொதுவான அறிகுறிகள்.மார்பக தோலில் ஏற்படும் மாற்றம் வீக்கம் செவத்தல் போன்றவற்றை காணப்படும்.மார்பக புற்றுநோய் அளவு அதிகரிப்பு வடிவத்தில் மாற்றம். மார்பகத்தில் ஒரு கட்டி இருக்கக்கூடும்.முளைக்காம்புகளில் இருந்து தாய்ப்பாலை தவிர வேறு ஏதாவது வெளியேறுதல்.மார்பகத்தின் எந்த ஒரு பகுதியிலும் வலி ஏற்படுதல்.முளைக்காம்பு உள்நோக்கி இழுத்தல் போன்ற வலிகள் ஏற்படுதல்.
- மார்பகத்தின் மேல் இருக்கும் தோலின் மீது ஏற்படும் பள்ளம்.
- மார்பகத்தின் மேல் இருக்கும் தோல் சிவப்பாக மாறுதல்.
- மார்பகத்தின் மேல் இருக்கும் தோலின் மீது குழி ஏற்படுதல்.
- மார்பகத்திற்கு வலியை உண்டாக்குதல்.
- புதிதாக தலைகீழான முலைக்காம்பு ஏற்படுதல்.
- முலைக்காம்பை சுற்றி சொறி ஏற்படுதல்.
- முலைக்காம்பில் இருந்து ரத்த களரி வெளியேறுதல்.
மார்பக புற்றுநோய் குணமாக
ஆளி விதையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மார்பக புற்று நோயை தடுக்க உதவுகிறது.பிரேசில் நட்ஸ் இதனை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது புற்றுநோய் வராமல் தடுக்கின்றது.பூண்டில் அல்லியம் என்ற வேதிப்பொருள் இருப்பதனால் மார்பக புற்று நோய்க்கு நல்ல மருந்தாக இருக்கிறது.