நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் அமைந்துள்ள மலையடி குட்டை கிராமத்தை சேர்ந்தவர். ராஜசேகரன் (28) தனது நண்பர்கள் ஆன தினேஷ் குமார் (25),பூவரசன்,(23) பிரவீன் ராஜ்(27),விக்னேஷ் (27),பெரியசாமி (25) ஆகியோர்களுடன் மலார் குட்டை அருகே நேற்று முன்தினம் மது அருந்தி கொண்டிருக்கும் பொழுது ராஜசேகரனுக்கும் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நண்பர்களுக்கும் ராஜசேகரன்க்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததால் அவரை அடித்து கொலை செய்து விட்டு கல்லை கட்டி மலார் குட்டையில் வீசி சென்று விட்டனர்.
இதை அடுத்து தினேஷ் குமார், பூவரசன்,பிரவீன் ராஜ்,விக்னேஷ் ,பெரியசாமி ஆகியோர்கள் தானாகவே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தனர். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணையை நடத்தி வந்தார். ராஜசேகரனை கொலை செய்து மலார் கொட்டையில் வீசப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மலார் குட்டையில் இருந்து ராஜசேகரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதை அடுத்து சரணடைந்த ராஜசேகரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது விசாரணையில் ராஜசேகரனுக்கும் அவரின் நண்பர்களுக்கும் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு இருந்ததாகவும் இதனால் அவரை கொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் போலீசார் அவர்களை பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் மலையடி குட்டை கிராம மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.