கொய்யா பழம் எப்போது சாப்பிட வேண்டும்
கொய்யா பழம் வைட்டமின்
கொய்யா பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது கொய்யாவில் அதிக வைட்டமின் சி வைட்டமின் ஏ இ போன்ற சத்துக்கள் உள்ளது இதுபோன்ற சத்துக்களுடன் பொட்டாசியம் போலிக் அமிலம் மெக்னீசியம் தாது சத்துக்கள் போன்றவை கொய்யா பழத்தின் உள்ளன கொய்யாப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் எளிமையாக தீர்த்து விடுகிறது
கொய்யா பழத்தின் நன்மைகள்
கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகமாக உள்வதால் கர்ப்பமானவர்கள் தினந்தோறும் ஒன்று சாப்பிட்டு வந்தால் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்யும்.
கொய்யாப்பழம் சாப்பிட்டு வருவதால் கல்லீரலை பலப்படுத்த செய்கிறது இதனால் கொய்யா பழம் அடிக்கடி சேர்ப்பது நல்லது.
இதனால் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொய்யாப் பழத்திற்கு உள்ளது.
கொய்யா பழம் சாப்பிடும் முறை
கொய்யாப்பழம் சாப்பிடுவதற்கும் முன் எடுத்துக் கொள்ளக் கூடாது இது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் இல்லை சாப்பிட்ட பிறகு கொய்யாப்பழம் எடுத்துக் கொள்ளவும்.
சர்க்கரை நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா
கொய்யாப்பழம் நீரழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க இந்த பழம் பயன்படும்.
கொய்யா பழத்தை நீங்கள் தினந்தோறும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் சில மாதங்களில் கண்கூடாகவே சிவப்பழகை பார்க்க முடியும்
மது போதைக்கு அடிமையானவர்கள் இந்த பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் இந்தப் பழக்கத்திலிருந்து விரைவில் மறந்து விடுவார்கள்.
இந்த கொய்யா பழம் குழந்தைகளுக்கு அளவோடு கொடுத்து வந்தால் அவர்களின் எலும்பு மற்றும் பற்கள் பலமடையும் அது மட்டுமல்லாமல் சொறி சிரங்கு போன்ற சரும நோய்களை குணப்படுத்தும்.
கொய்யா பழம் பயன்கள்
தினந்தோறும் இரண்டு கொய்யாக்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுடைய கொலாஸ்டர் குறையும் அது மட்டும் இல்லாம நரம்புகளை பலப்படுத்த செய்யும் உடல் உஷ்ணத்தை குறைக்கும் அதிக ரத்த அழுத்தம் மற்றும்அதிக கொழுப்பை குறைக்கும் தன்மை கொய்யாவிற்கு உள்ளது
கொய்யா கோடை காலத்தில் அதிகமாக விளையும் இப்பளம் மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் தீர்ந்து விடும்.கொய்யா பழத்தின் தோலை நீக்கிவிட்டு சாப்பிட்டால் அதனால் ஒரு பயணம் கிடையாது இதனால் தோலை நீக்கி விடக்கூடாது தோல் நீக்காமல் சாப்பிட வேண்டும்
கொய்யா பழத்தால் கர்ப்பிணிக்கும் கருவுக்கும் பயன்படும் நன்மைகள்
விட்டமின் ஏ சத்துக்கள் அதிகமாக கொய்யாவில் இருப்பதால் இது கர்ப்பிணி பெண்களுக்கு மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கு கண் குறைபாடும் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் இந்தக் கொய்யாப்பழம் குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்த்து நரம்பில் உள்ள கோளாறுகளை நீக்கி குழந்தையே பாதுகாக்கிறது.
கொய்யா பழம் தீமைகள்
கொய்யாப்பழம் இரவில் சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும் இதனால் கொய்யா பழத்தை இரவில் உண்பதை தவிர்க்கவும்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுன்னு பெரியவர்கள் சொல்லி இருக்காங்க அதே போல் கொய்யாப்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.