தீபாவளி பண்டிகை வரலாறு
- இந்திய கலாச்சாரம் என்பது பண்டிகை அதிகம் நிறைந்து காணப்படும். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை இருக்கும்.அதுபோல் தீபாவளி பண்டிகைக்கும் நிறைய கதைகள் இருக்கின்றது.தீபாவளியை தீ ஒளி என்று முன்னோர்கள் கூறுவார்கள் தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்று கூறுவார்கள்.
- ஒளி என்பது வெற்றியின் அடையாளம் தீ என்பது தோல்வியின் அடையாளம் என்றும் கூறுவார்கள்.தீபாவளி பண்டிகை தீமையின் வடிவமான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது என்று புராணங்கள் கூறுகின்றது.நம்மில் பெரும்பாலானோர் தெரியும் நரகாசுரன் கதை.
- நரகாசுரனின் உண்மை பெயர் பௌமன் திருமால் வரகா அவதாரம் எடுத்து பூமி தொலைத்து அசுரர்களை அழிக்க சென்ற போது அவரின் பரிசத்தால் பூமாதேவிக்கு பிறந்தவர் தான் நரகாசுரன்.அசுரவதத்தில் பிறந்தவன் என்பதனால் அசுர பாவம் இவனுக்கு இயல்பாக அமைந்தது.
- நரன் என்றால் மனிதன்.மனிதனாக இருந்தாலும் துற்குணங்களை கொண்டவனாக இருந்ததுனால் நரகாசுரன் என்று பெயர் வந்தது.நரகாசுரன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.இதனை அறிந்த மகாவிஷ்ணு அவனே வதைக்க நினைத்தார்.
- ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்ததால்.அவன் தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாது என்று வரம் பெற்று வந்தான்.எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தால் நரகாசுரனுடன் போரிட்டார்.அவன் மகாவிஷ்ணு மீது அம்பு விட்டான்.
- அந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைந்தது போல் கீழே விழுந்தார்.இதனை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார்.சத்தியபாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தார்.
- பூமி தாயின் அம்புக்கு பலியாகி சரிந்தான் அப்போதுதான் அவனுக்கு சத்தியபாமா தன்னுடைய தாய் என்று தெரிந்தது.அவரிடம் அம்மா நான் மறைந்த இந்த நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும்.என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று பூமி தாயிடம் வேண்டினான்.
- மகாவிஷ்ணுவும் சத்தியபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள்.இதனை ஒட்டி நரகாசுரன் மறைந்த மகிழ்ச்சி பொங்கிய அந்த நாளை தீபாவளி பண்டிகையாக கொண்டாடினார்கள்.இதுதான் கிருஷ்ணனின் லீலை என்று அனைவரும் கூறுவார்கள்.
- வால்மீகி ராமாயணத்தில் ராமன் கொடியவன் ஆனான் ராவணனை அழித்துவிட்டு தன்னுடைய வனவாசத்தை முடித்துக் கொண்டு மனைவி சீதையுடன் சகோதரன் லட்சுமணன் உடன் அயோத்திக்கு திரும்பிய நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றார்கள் அதனுடைய தொடர்ச்சியாக தீபாவளி இருந்தது என்றும் கூறுவார்கள்.
- தீபாவளி ஐப்பசி மாதம் வரும் ஆனால் ஒரு சில வருடங்களில் இந்த மாதத்தில் மாற்றம் நடப்பது உண்டு ஐப்பசி இல்லை என்றால் புரட்டாசி இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது.
- இதனை கார்த்திகை மாதம் அம்மாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகின்றது.இதனை சுகா ராத்திரி என்று மக்கள் குறிப்பிடுவார்கள்.விஷ்ணு புராணம் தீபாவளி என்று அதிகாலையில் நீராடி மகாலட்சுமி பூஜையை அனுஷ்டித்து தீபங்களை ஏற்றி வீடு நிறைய வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
- தீபாவளி பண்டிகையை கிபி 1100 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டது.இந்தியாவில் சில வரலாற்று குறிப்புகள் இதனை குறிப்பிட்டு இருக்கிறது.கிபி ஆயிரத்தி 1117 இல் வாழ்ந்த சாளுக்கிய மன்னன் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வந்ததாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று பதிக்கப்பட்டு இருக்கிறது.
- கிபி 1250 இல் எழுதப்பட்ட லீலாவதி இன்னும் மராட்டி நூலில் எண்ணெய் தேய்த்து நீராடுவதை பற்றி குறிப்புகள் இடம் பெற்று இருக்கிறது.ஐப்பசி மாதம் பணி நிறைந்த மாதம் இல்லம் தோறும் குளிர் அதிகமாக இருக்கும் காலம்.இருள் கூடும் காலம் என்றும் கூறுவார்கள்.இந்த காலத்தில் ஒளியைப் பெருக்கி உஷ்ணத்தை வீடுகளில் உருவாக்க இந்த பண்டிகையை மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
- Advertisement -