Homeசமையல்சப்பாத்தி, பூரிக்கு செம்ம டெஸ்ட்... அண்ணாசி மசாலா செய்வது எப்படி?

சப்பாத்தி, பூரிக்கு செம்ம டெஸ்ட்… அண்ணாசி மசாலா செய்வது எப்படி?

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் அண்ணாசி மசாலா செய்வது எப்படி என்பதனை பற்றி பார்க்க இருக்கிறோம்.நீங்கள் அன்னாசி பழம் பிரியராக இருக்கிறீர்களா?

நீங்கள் அன்னாச்சி பழத்தை வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படி விரும்பினால் அன்னாசியை வைத்து ஒரு மசாலா செய்யலாம்.

- Advertisement -

இந்த அன்னாசி மசாலா கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும்.இந்த மசாலாவை இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.இது வித்தியாசமான சுவையை கொண்டிருப்பதனால் நீங்கள் இதனை விரும்பி சாப்பிடுவீர்கள்.

மேலும் உங்களுக்கு அன்னாசி மசாலா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இதற்கு எளிய செய்முறை கொடுக்கப்பட்டிருக்கிறது.அதனை பார்த்து சுவையான இந்த அன்னாசி மசாலாவை செய்து கொள்ளுங்கள்.மேலும் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அன்னாசி மசாலா

தேவையான பொருட்கள்
அன்னாசி – 1 கப்
புளிச்சாறு – 1/4 கப்
வெல்லம் – 5 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எள்ளு – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி வரமிளகாய் – 6
கறிவேப்பிலை – சிறிது
துருவிய தேங்காய் – 3/4 கப்
தண்ணீர் – 1/2 கப்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது

Untitled design 26

- Advertisement -
செய்முறை:
  1. முதலில் அன்னாசியை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு வானலியில் போட்டு நிறைவுற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. அதே வானொலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் எள்ளு உளுந்தம் பருப்பு வெந்தயம் காஷ்மீர் வரமிளகாய் கருவேப்பிலை துருவிய தேங்காய் தண்ணீர் போன்றவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு அதனை மிக்ஸியில் போட்டு சிறிது நீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  4. அன்னாசி வெந்ததும் அதில் புலி சாறு வெள்ளம் மஞ்சள் தூள் மட்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து தேடிக் கொள்ள வேண்டும் பிறகு 15 நிமிடம் மிதமான சூட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  5. பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி 10 நிமிடம் குறைவான சூட்டில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  6. பின்பு ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள கடுகு வரமிளகாய் கருவேப்பிலை போன்றவற்ற சேர்த்து தாளித்து அரைத்த மசாலாவில் சேர்த்து கிளறினால் சுவையான அன்னாசி மசாலா தயாராகிவிடும்.
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR