இனிப்பு கனவில் வந்தால் என்ன பலன் | Inippu kanavil vanthal
வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அன்றாட வாழ்வில் காணும் கனவு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு நம் கனவில் பலன்கள் இனிப்பு வகைகள் போன்றவற்றை காண்போம் அந்த வகையில் இனிப்பு வகை நம் கனவில் வந்தால் என்ன பலன் என்று இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
இனிப்பு கனவில் வந்தால் என்ன பலன்
இனிப்பு நம் கனவில் வந்தால் குழந்தைகள் போல் நாம் சந்தோஷமாக இருப்போம். ஏதோ நமக்கு வேணும் என்ற ஒரு விருப்பத்தை ரகசியமாக வைத்திருப்பீர்கள்.வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும்.வாழ்க்கையில் வரவிருக்கும் செல்வங்கள் மீது உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது.
இனிப்பு சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
இனிப்பு சாப்பிடுவது போல் கனவில் வந்தால் உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும் உங்களுக்கான நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.
அதிகமான இனிப்பு வகை சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
அதிகமான இனிப்பு வகை சாப்பிடுவது போல் கனவில் வந்தால் நீங்கள் தவறான பழக்கத்தில் அடிமையாகி அந்த பழக்கத்திலிருந்து வெளிவர முடியுமால் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் அவமானம் பட போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.
இனிப்பு மிட்டாய் சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
இனிப்பு மிட்டாய் சாப்பிடுவது போல் கனவில் வந்தால் உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். ஏதேனும் உணவு விருந்துகளில் நீங்கள் பங்கேற்பிர்கள். தேவையில்லாத விஷயங்களை எண்ணி நீங்கள் கஷ்டப்படுவீர்கள்.
இனிப்பை ருசி பார்ப்பது போல் கனவில் வந்தால்
இனிப்பை ருசி பார்ப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் வாழ்க்கையில் நினைத்து இருக்கும் நல்ல காரியங்கள் அனைத்தும் கூடிய விரைவில் நடந்து விடும். தேவையில்லாத கவலைகளை விட்டு விலகி விடுவீர்கள்.
இனிப்பு கொடுப்பது போல் கனவில் வந்தால்
இனிப்பு கொடுப்பது போல் கனவில் வந்தால் உங்களுக்கு வரவிருக்கும் அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரும். நீங்கள் நினைத்த காரியங்கள் நீங்கள் நினைத்தபடியே நடந்த விடும். நல்ல தகவல் உங்களை தேடி வரும்.நீங்கள் திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் உங்களுக்கான நல்ல வாழ்க்கை துணை விரைவில் கிடைக்கும் திருமணம் ஆனவராக இருந்தால் உங்களது இல்லற வாழ்க்கை நல்லா இருக்கும்.
இனிப்பு வாங்குவது போல் கனவில் வந்தால்
இனிப்பு வாங்குவது போல் கனவில் வந்தால் உங்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் வரும் உங்களை பிறர் தரக்குறைவாக பேசுவார்கள். நண்பர்களிடமிருந்து ஏமாற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும்.உங்கள் வாழ்க்கை பயணம் கொஞ்சம் கசப்பாக இருக்கும்.உறவினர்களிடம் வேலை செய்யும் இடத்தில் மற்றும் குடும்பத்தினருடன் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள் பிரச்சனைகளை நினைத்து கவலை கொள்வீர்கள்.
கர்ப்பமான பெண் இனிப்பு சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
கர்ப்பமான பெண் இனிப்பு சாப்பிடுவது போல் கனவில் வந்தால் உங்களுக்கான நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். நீங்கள் அல்லது உங்கள் வாழ்க்கை துணை கர்ப்பமாக இருந்தால் சுபா பிரசவம் நடப்பதற்கான அறிகுறியாகும். எந்த ஒரு பதட்டமும் கவலையும் இல்லாமல் இருப்பீர்கள். இறைவன் அருள் உங்களுக்கு நேரடியாக கிடைக்கும்.
இனிப்பு தயார் செய்வது போல் கனவில் வந்தால்
இனிப்பு தயார் செய்வது போல் கனவில் வந்தால் உங்களின் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். இனிவரும் காலங்களில் உங்களுக்கு நல்லதாகவே நடக்கும். உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். புதிய நண்பர்களுடன் இணைவீர்கள்.
பல இனிப்புகளில் இருந்து ஒரு இனிப்பை சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
பல இனிப்புகளில் இருந்து ஒரு இனிப்பை சாப்பிடுவது போல் கனவில் வந்தால் உங்களுக்கு வரவிருக்கும் மகிழ்ச்சியான வாழ்வு குறித்து அறிவுறுத்துகிறது. உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேற்றம் அடைவதற்கான அறிகுறிகள் உள்ளது.நீங்கள் வாழ்வில் அடைய நினைத்த விருப்பங்கள் விரைவில் அடைவீர்கள்.
மற்றவர்களுக்கு இனிப்பு வழங்குவது போல் கனவில் வந்தால்
மற்றவர்களுக்கு இனிப்பு வழங்குவது போல் கனவில் வந்தால் திருமணம் ஆகாதவாராக இருந்தால் ஒரு நல்ல வாழ்க்கை துணையை விரைவில் சந்திப்பார்கள் திருமணம் ஆனவர்களாக இருந்தால் வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருப்பார்கள்.
லட்டு சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
லட்டு சாப்பிடுவது போல் கனவில் வந்தால் நல்ல அமைதியான வாழ்க்கை அமையும் குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
தெரியாதவரிடமிருந்து இனிப்பு வாங்குவது போல் கனவில் வந்தால்
தெரியாதவர்களிடமிருந்து இனிப்பு வாங்குவது போல் கனவில் வந்தால் பிறரிடம் இருந்து உங்களுக்கு பிரச்சனைகள் வரும். உறவினர்கள் உங்களைத் தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டி விடுவார்கள்.
இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்–கனவு பலன்கள்