இறைச்சியை கனவில் கண்டால் என்ன பலன் | Iraicci Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!! இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் வரும் கனவுகளில் நல்லது நடப்பது போலும் இருக்கலாம் கெட்டது நடப்பது போல இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.
கனவில் இறைச்சியை சாப்பிடுவது போல், சமைப்பது போல், வெட்டுவது போல் என இறைச்சியை பற்றி பல கனவுகள் வரும் இறைச்சி கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இறைச்சியை கனவில் கண்டால் என்ன பலன்
பொதுவாக இறைச்சி கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு பேர் புகழ் கிடைக்கும் அதாவது தொழில் செய்து கொண்டு இருப்பவராக இருந்தால் தொழிலில் பெரும் முன்னேற்றம் அடைந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேர் புகழ் பெறுவார். வேலை செய்து கொண்டிருப்பவராக இருந்தால் வேலை செய்யும் இடத்தில் அனைவரிடமும் பேர்,புகழ் பெற்று பதவி உயர்வு பெறுவார்.
சமைத்த இறைச்சி கனவில் வந்தால்
சமைத்த இறைச்சி கனவில் வந்தால் கனவு காண்பவர் உத்வேகத்துடன் இருக்கிறார் என்று அர்த்தம். தற்போது உங்கள் வாழ்வில் யார் பேச்சையும் கேட்காமல் உங்கள் மனதிற்கு பட்டதை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் பிறரின் உதவியை கேட்காமல் உங்களின் பிரச்சனைகளை நீங்களே தீர்த்து விடுவீர்கள்.
கறி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன் |
சமைத்த இறைச்சியை சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
சமைத்த இறைச்சியை சாப்பிடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் ஒரு விழாவில் கலந்து கொல்லப் போகிறார்கள் அந்த விழாவில் எதிர்பாராத விதமாக உங்களின் பழைய நண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பீர்கள்.
இறைச்சியை சமைப்பது போல் கனவில் வந்தால்
இறைச்சியை சமைப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர்களுக்கு விரைவில் பொன்,பொருள் போன்ற ஆபரண பொருட்கள் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் உங்களைத் தேடி வரும்.
இறைச்சி வாங்குவது போல் கனவில் வந்தால்
இறைச்சி வாங்குவது போல் கனவில் வந்தால் அது நல்லதுக்கு தான்.கனவு காண்பவர்களுக்கு எதிர்ப்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். விளையாட்டு வீரராக இருந்தால் நீங்கள் எதிர்பாராத வெற்றிகள் உங்களுக்கு கிடைக்கும்.
தொழிலுக்காக முதலீடு செய்ய வேண்டும் என்ற நினைத்திருப்பவர்கள் இப்பொழுது முதலீடு செய்யலாம் இப்போது முதலீடு செய்தால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
மேலும் கனவு பலன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஆட்டுக்கறி கனவில் கண்டால் என்ன பலன் |
தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன் |
முருங்கைக்காய் கனவில் வந்தால் என்ன பலன் |
வாழைப்பழம் கனவில் வந்தால் என்ன பலன் |