இறந்தவர் கனவில் வந்தால் என்ன பலன்| Iranthavargal Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!! வாழ்வில் ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். தூங்கும் போது கனவுகள் வரும். நமக்கு வரும் கனவுகளில் நல்லது நடப்பது போல் வரலாம்,கெட்டது நடப்பது போலும் வரலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
நாம் ஒருவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்போம் அவர்கள் திடீரென்று இறந்து விடுவார்கள்.இறந்த பிறகு அந்த நபர் நாம் தூங்கும் பொழுது நம் கனவில் வருவார்கள். அவ்வாறு கனவில் இறந்த நபர்கள் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
நமக்குத் தெரிந்தவர்கள் மற்றும் நாம் அதிகம் பாசம் வைத்தவர்கள் இறந்து பிறகு அவர்கள் நம் கனவில் வந்தால் கனவு காண்பவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட இருக்கிறது அதனால் அவர்கள் தங்களின் கனவுகளில் வந்து எச்சரிக்கையுடன் இருப்பதற்கு கனவு மூலம் உணர்த்துகின்றார்கள்.அதனால் எந்த ஒரு காரியங்கள் செய்தாலும் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டும். வெளி பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இறந்த தாத்தா கனவில் வந்தால் என்ன பலன்
இறந்த தாத்தா கனவில் வந்தால் கனவு காண்பவரின் பெற்றோருக்கு மரணத்தை விளைவிக்கக் கூடிய அளவிற்கு உடல்நிலை குறைபாடு ஏற்படும். அதை உணர்த்துவதற்காக தான் இறந்த தாத்தா உங்கள் கனவில் வருகிறார்கள் அதனால் உங்கள் பெற்றோரை கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள்.
இறந்தவர் கனவில் வந்து அழுதால்
இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுதால் அது நமக்கு நல்லது கிடையாது.அது உங்கள் குடும்பத்தினருக்கு மற்றும் நண்பர்களுக்கும் துன்பத்தை விளைவிக்கும்.அதனால் ஏற்கனவே இறந்தவர்கள் நம் கனவில் அழுவது போல் வந்தால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடுவது நல்லது. கடவுளே வழிபடுவதன் மூலம் நமக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் நீங்கும்.
ஆவிகள் பற்றிய உண்மைகள் |
இறந்தவர் கனவில் வந்து அழைத்தால்
பொதுவாக நம் கனவில் இறந்தவர்கள் வந்தாலே நமக்கு பயமாக இருக்கும் அதுவும் அவர்கள் கனவில் நம்மளை அழைப்பது போல் வந்தால் பயம் அதிகரிக்கும். இறந்தவர்கள் கனவில் நம்மை அழைப்பது போல் வந்தால் பயப்படத் தேவையில்லை நம்மை தேடி ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்று தான் அர்த்தம்.
உங்கள் பழைய நண்பர்களுடன் நீண்ட நாட்களாக பேசிக்கொள்ளாமல் இருப்பீர்கள். அவர்களுடன் மீண்டும் சேர்ந்து பேசுவதற்காக இந்த கனவு உணர்த்துகிறது.
இறந்தவர் கனவில் வந்து மீண்டும் இறந்தால்
பொதுவாக நமக்கு தெரிந்தவர்கள் யாராவது இறப்பது போல் கனவு வந்தால் நமக்கு நன்மைகள் தான் நடக்கும் தீமைகள் எதுவும் நடக்காது இறந்தவர்கள் கனவில் வந்து மீண்டும் இருந்தால் அதுவும் நன்மைகள் தான் நடக்கும் அதனால் வரும் கனவு வந்தால் பயப்பட தேவையில்லை.
இறந்தவர்கள் கனவில் வந்து பணம் தந்தால் என்ன பலன்
இறந்தவர்கள் கனவில் வந்து பணம் தந்தால் எதிர்பாராத ஒரு நன்மைகள் உங்களுக்கு நடக்கும் அதாவது நீண்ட நாட்களாக உங்களின் பூர்விக சொத்து உங்களுக்கு கிடைப்பதற்கு தடை ஏற்பட்டிருக்கும் அந்த தடைகள் நீங்கி உங்களுக்கு விரைவில் உங்களின் பூர்வீக சொத்து கிடைக்கும்.
நீங்கள் யாரிடமாவது பணத்தை கொடுத்துவிட்டு மீண்டும் அவர்கள் தராமல் இருந்தால் கூடிய விரைவில் அவர்கள் உங்களின் பணத்தை தந்து விடுவார்கள்.
இறந்தவர் கனவில் வந்து பேசினால்
பொதுவாக இறந்தவர்கள் நமக்கு ரொம்ப நெருங்கிய நபராக இருந்தால் அவர்கள் நம்முடன் வந்து பேசுவது போல் கனவு வரும் நீங்கள் ஏதோ ஒரு ஆபத்தான சூழ்நிலைகளில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம் அதை விட்டு வெளிய வருவதற்காக அவர்கள் கனவுகளின் மூலம் வந்து உங்களுக்கு உணர்த்துகிறார்கள்.
சடலம் கனவில் வந்தால் என்ன பலன்
இறந்தவர்களின் சடலம் கனவில் வந்தால் உங்கள் தொழிலிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். நோய்நொடி இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். தொழிலில் லாபங்கள் கிடைத்து செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
பிணத்தை கனவில் கண்டால் என்ன பலன் |
மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
கருடன் கனவில் வந்தால் என்ன பலன் |
கனவில் கருப்பு பாம்பு வந்தால் என்ன பலன் |