நடிகர் சிவகார்த்திகேயன் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் பெண் சென்ற மிகப்பெரிய தொழில் படத்தை கொடுத்திருந்தார்.அந்தப் படத்தின் தோல்வியை சரி கட்டுவதற்காக மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஒரு படத்தில் நடித்து புகழ்பெற்ற அதிதி சங்கர் இந்த படத்தில் நடிகையாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது இந்நிலையில் இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளிக்கு வர இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் P. ஜெயசீலன் இந்த படத்தின் மீது வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கொடி இந்தியா ஜனநாயக கட்சி கொடியை போல இருப்பதால் இந்த படத்திற்கு தடை பிரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது இந்த வழக்கை நீதிபதி RN மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்த போது படத்தின் தயாரிப்பாளர் சார்பாக இந்த படத்தின் இருக்கும் அனைத்து காட்சிகளும் கற்பனையாக எடுக்கப்பட்டுள்ளது.இதை மாற்ற வேண்டும் என்றால் 10 முதல் 15 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும்.
படம் நாளைக்கு வெளியாகவில்லை என்றால் வெறும் நஷ்டம் ஏற்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.நீதிபதி மஞ்சுளா நல்ல ஆராய்ந்து படத்திற்கும் இந்திய ஜனநாயக கட்சி கொடிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று படத்தில் 40 வினாடி காட்சி வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார். அது மட்டும் இல்லாமல் படத்தில் காட்டப்பட்டுள்ள கொடியின் நிறம் இந்திய ஜனநாயக கட்சியின் கொடியின் நிறம் போல் இருக்காமல் இருக்க வேண்டும் என்றும் அதன் பின்னரே ஓடிடி மற்றும் சேட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.