Homeதிரை விமர்சனம்உதயநிதி ஸ்டாலின் படங்களிலே இதுதான் அதிக வசூலா? மாமன்னன் படம் வெற்றி விழாவில் பேசிய உதயநிதி!!

உதயநிதி ஸ்டாலின் படங்களிலே இதுதான் அதிக வசூலா? மாமன்னன் படம் வெற்றி விழாவில் பேசிய உதயநிதி!!

TAMILDHESAM-GOOGLE-NEWS

உதயநிதி வடிவேல் கீர்த்தி சுரேஷ் ஆகியவர்கள் இணைந்து நடித்த திரைப்படம் மாமன்னன் இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையில் வெளியிடப்பட்டிருந்தது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கிறார் அதனால் கட்சிப் பணிகள் அதிகமாக இருப்பதால் மாமன்னன் படத்திற்குப் பிறகு படங்கள் நடிப்பதை நிறுத்த போவதாக சொல்லி இருந்தார்.அதற்காக தான் இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதற்காக உதயநிதி ஸ்டாலின் கேட்டு அவரை இந்த படத்திற்கு இசையமைக்க வைத்தார் என்று  ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் படங்களிலே இதுதான் அதிக வசூலா? மாமன்னன் படம் வெற்றி விழாவில் பேசிய உதயநிதி!!

பல நாள் கழித்து இந்த படம் திரையில் வெளியிடப்பட்டது இதை அடுத்து மாமன்னன் படம் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது.அந்த விழாவின்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்திற்காக விளம்பரம் செய்த அனைவருக்கும் நன்றி என தொடங்கி தனது உரையை தொடங்கினார் அது மட்டும் இல்லாமல் மாமன்னன் படம் இரண்டு வாரம் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதாகவும், இது நாள் வரை உலகம் முழுவதும் 52 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது கரியரில் மாமன்னன் படம் தான் அதிக அளவு வசூல் செய்ததாக மகிழ்ச்சியாக சொல்லி இருந்தார்.நல்ல கருத்தை கொண்ட இந்த படத்தை மக்களிடம் சேர்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் சொல்லியிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

MOST POPULAR

Recent Comments

நல்ல நேரம் இன்று
கனவு பலன்கள் Png