தமிழின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து தமன்னா மோகன்லால் சிவராஜ்குமார் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் அனிருத் இசையமைத்த இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் இருந்து காவாலா என்ற பாடல் தமன்னா நடனத்தில் வெளியாகிய இணையத்தில் வைரலாகி வருகிறது.இன்று மாலை இந்த படத்தின் இரண்டாவது சிங்கில் வெளியாக இருக்கிறது.
படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு சில நாட்களை இருக்கும் நிலையில் படத்தின் டைட்டில் பிரச்சனை வந்துள்ளது அதாவது மலையாளத்தில் ஜெயிலர் என்ற டைட்டிலில் ஒரு படம் தயாராகி வருவதால் மலையாளத்தில் இந்த படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மலையாள மொழியில் மட்டும் டைட்டில் மாத்தி ரிலீஸ் செய்யலாமா என்று ஆலோசித்து வருகின்றனர்.