ஜன்னல் தமிழ் சொல் | Jannal meaning
Jannal Meaning:வணக்கம் நண்பர்களே இந்த உலகத்தில் வீடு கட்டுவது என்பது சில பேருக்கு கனவாக இருக்கிறது அந்த கனவு எல்லாம் கட்டும்பொழுது பார்த்து பார்த்து கட்டுவார்கள். ஒரு வீடு என்றால் கதவு ஜன்னல் போன்றவைகள் அமைக்கப்பட்டு தான் கட்டப்படுவார்கள் அவ்வாறு அமைக்கப்படும் ஜன்னலுக்கு தமிழில் என்ன பெயர் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை அதனால் ஜன்னல் என்பதின் தமிழ் பெயரை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
ஜன்னல் தமிழ் சொல்
பொதுவாக வீடு கட்டும் பொழுது வீட்டுக்குள் செல்வதற்காக கதவு ஒன்றை அமைப்போம் அதே போல் வீட்டுக்குள் காற்று மற்றும் பகல் நேரத்தில் வெளிச்சம் வருவதற்காக ஜன்னலை அமைப்போம் அவ்வாறு அமைக்கும் ஜன்னலுக்கு தமிழில் என்ன பெயர் என்று நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஜன்னல் என்பதற்கான தமிழ் சொல் சாளரம் ஆகும். ஆனால் சாளரம் என்பது உண்மையான தமிழ் சொல் இல்லை என்றும் இது ஒரு வடமொழிச் சொல் என்று பலரும் அழைக்கின்றனர். அப்பொழுது ஜன்னலுக்கான உண்மையான தமிழ் என்னவாக இருக்கும். ஜன்னல் என்பதற்கான உண்மையான தமிழ் சொல் காலதர்.
காலதர் என்றால் என்ன என்பதற்கான முழு அர்த்தத்தை இப்பொழுது பார்க்கலாம்.ஜன்னல் வீட்டில் அமைப்பதற்கு முக்கிய காரணம் வீட்டிற்குள் காற்று வருவதற்கு தான் ஜன்னல் என்பதே நம் வீட்டில் அமைக்கிறோம்.
கால்+அதர்=காலதர் கால் என்பதற்கான பொருள் காற்று ஆகும் அதர் என்பதற்கான பொருள் நுழையும் வழி காலதர் என்றால் காற்று நுழையும் வழி என்று அர்த்தம்.இதுதான் ஜன்னலுக்கான முழு அர்த்தம்.ஜன்னல் என்பதற்கான தமிழ் பெயர் மற்றும் அதற்கான அர்த்தங்கள் இந்த பதிவின் மூலம் உங்களுக்கு முழுமையாக தெரிந்து இருக்கும் என்று நம்புகிறோம்.
Read Also:
Annoying Meaning In Tamil-தமிழில் அர்த்தம்
Virtual-ன்னா தமிழ் அர்த்தம் என்ன | Virtual Meaning in Tamil
Aesthetic Meaning In Tamil-தமிழில் அர்த்தம்
Doubt Meaning In Tamil-தமிழில் அர்த்தம்