ஜாதிக்காய் பயன்கள் | ஜாதிக்காய் பவுடர் சாப்பிடும் முறை | Jathikai Uses in Tamil
ஜாதிக்காய்யானது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஜாதிக்காய் குழந்தைகளின் இறப்பை நன்கு பசியை தூண்டி பசி மற்றும் ஜீரண சக்தியே தரும். ஜாதிக்காய் குழந்தையின் காரணம் புரியாத அழுகையை நிறுத்தி அமைதியான தூக்கம் தரும்.
ஜாதிக்காயை மருந்தாக பயன்படுத்துவதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா போன்ற பல்வேறு உடல்நல பிரச்சினைகளை குணப்படுத்த முடியும்.
ஜாதிக்காய் பயன்கள் – Jathikai Uses in Tamil
இன்றைய காலத்தில் மனிதர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அவர்கள் தூக்க மாத்திரை இல்லாமல் இயற்கையாக தூங்குவதற்கு ஜாதிக்காய் உதவுகிறது. ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் பவுடரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் சேர்த்து தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் மிக விரைவில் ஆழ்ந்த தூக்கம் வரும் மற்றும் நன்றாக தூங்கினாலே பல நோய்கள் வராமல் இருக்கும்.
உங்களுக்கு வயிற்றுப்போக்குபிரச்சனை மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் அவர்கள் காலை உணவில் அல்லது ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் அளவு ஜாதிக்காய் தூள் எடுத்துக் கொண்டால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் நீரும்.
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் சிறிதளவு ஜாதிக்காயை உரசி நாக்கில் தடவினால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
கண் பார்வை குறைவாக உள்ளவர்கள் இரவு தூங்குவதற்கு முன் ஜாதிக்காய் அரைத்து கண்களைச் சுற்றி பற்று போட்டு காலையில் முகம் கழுவி வர கண் பார்வை தெளிவாகத் தெரியும்.
ஜாதிக்காய் பவுடர் சாப்பிடும் முறை
ஒரு டம்ளர் பால் எடுத்து பால் நன்றாக கொதிக்க வைக்கணும் இந்தப் பால் கொதித்து இறக்கும் சமயத்தில் ஒரு கால் ஸ்பூன் அளவு ஜாதிக்காய் பவுடரை பாலில் கலந்து நன்றாக கொதிக்க வைக்கணும் நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை பால் குடிக்கிறதா இருந்தால் காலை கால் ஸ்பூன் மற்றும் இரவு கால் ஸ்பூன் பயன்படுத்தலாம். நீங்கள் இரவு மட்டும்தான் குடிக்க போறதா இருந்தால் அரை ஸ்பூன் பயன்படுத்தலாம் இல்லேன்னா ஒரு ஸ்பூன்பயன்படுத்தலாம் அதற்கு மேல் பயன்படுத்துவது நல்லதல்ல.அப்புறம் பாலுக்கு தேவையான நாட்டுச் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.இந்தப் பாலை வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வரலாம் தொடர்ந்து மூன்று மாதம் குடித்து வரலாம்.
ஜாதிக்காய் அழகு குறிப்புகள்
ஜாதிக்காயுடன் சந்தனம் மிளகு சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருக்கள் மறையும், கரும்புள்ளி, தழும்புகள் போன்றவை மறைந்து முகம் பளபளப்பாகும்.
தேம்பல் மறைய ஜாதிக்காயை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் மறையும்.
முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க ஜாதிக்காய் தூள், கெட்டியான தயிர், தேன் மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழிவினால் சுருக்கங்கள் ஏற்படாமல் தள்ளிப் போகும்.
ஜாதிக்காய் தீமைகள்
ஜாதிக்காய் ஆனது குழந்தைகளுக்கு நல்லது தான். ஆனால் ஜாதிக்காயே அதிகம் குழந்தைகளுக்கு தரக்கூடாது ஏனென்றால் ஜாதிக்காயில் பித்தம் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகள் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஜாதிக்காய் ஆனது அதிக அளவு எடுத்துக் கொள்ளும்போது மயக்கம், பித்தம், வாயு, வேதி, பலவீனம், இருமல், இரைப்பை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஜாதிக்காயை அளவோடு பயன்படுத்தினால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது.