காளியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Kaaliyamman Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!! இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் வரும் கனவுகளில் நல்லது நடப்பது போலும் இருக்கலாம் கெட்டது நடப்பது போல இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.உங்கள் கனவில் கடவுள் அதாவது அம்மன் போன்ற சாமிகள் வந்தால் மகிழ்ச்சியாக கனவில் சாமி வந்ததால் நல்லது தான் நடக்கும் என்று நினைத்துக் கொண்டே இருப்பீர்கள்.
அதேபோல் உங்கள் கனவில் கருப்புசாமி,காளியம்மன் போன்ற சாமிகள் வந்தால் நமக்கு ஏதோ ஒரு கெட்டது நடந்து விடுமோ என்று பயந்து கொண்டு இருப்பீர்கள்.அப்படி உங்கள் கனவில் காளியம்மன் வந்தால் என்ன பலன் இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
காளியம்மன் கனவில் வந்தால் என்ன பலன்
காளியம்மன் கனவில் வந்தால் எதற்கும் கெட்டது நடந்து விடும் என்று பயப்பட தேவையில்லை காளியம்மன் கனவில் வருவதற்கு முக்கிய காரணம் உங்க வீட்டில் பிரச்சனைகள் இருக்கிறது அந்த பிரச்சனையிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வெளியே வருவதற்காக காளியம்மன் உங்கள் கனவில் வந்து உணர்த்துகிறார்கள்.
காளியம்மன் எப்பொழுதும் தனது பக்தர்கள் பாதிக்க கூடாது என்று நினைக்கக்கூடிய கடவுளாக இருக்கிறார்.அதனால் அவர்கள் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வருவதற்கு முன்பே அதில் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு கனவுகள் மூலம் வந்து உணர்த்துகிறார்கள்.எந்த ஒரு கடவுள் கனவில் வந்தாலும் வீட்டின் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.
கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன் |
காளி தேவி முழு உருவம் கனவில் வந்தால்
காளி தேவி முழு உருவம் கனவில் வந்தால் உங்களின் கிரக சூழ்நிலை இப்போதைக்கு சரியில்லை என்று அர்த்தம். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் அல்லது உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும் சில பிரச்சனைகள் ஏற்படும்.
அது மட்டுமில்லாமல் நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் அங்கேயும் சில பிரச்சனைகள் ஏற்படும் அதனால் கவனத்துடன் இருக்க வேண்டும்.உங்கள் குடும்பத்தினரும் மற்றும் உங்கள் நண்பர்களும் உங்களுக்கு துன்பத்தினை கொடுப்பார்கள்.
காளி தேவி திரிசூலம் கனவில் வந்தால்
காளிதேவி திரிசூலம் கனவில் வந்தால் கனவு காண்பவர் உங்கள் எதிரிகளிடமிருந்து இதனால் வரை வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொழில் செய்பவராக இருந்தால் தொழிலில் லாபம் பெற்று வாழ்வில் முன்னேறுவீர்கள்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
சிவன் கனவில் வந்தால் என்ன பலன் |
அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் |
மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் |
சித்தர்கள் கனவில் வந்தால் என்ன பலன் |