Kadi Jokes in Tamil With Answers | கடிஜோக்ஸ்
Kadi Jokes in Tamil:வணக்கம் நண்பர்களே.!! நம் வாழ்வில் சிரிப்பு என்பது அவசியமான ஒன்றாகும். இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய கொடிய நோயாக இருந்தாலும் சிரித்துக் கொண்டிருந்தால் அந்த நோய் விலகி விடும். நம் முன்னோர்கள் நமக்கு சிரித்து வாழ வேண்டும் என்று கூறியுள்ளனர் சிரிப்பு விட இந்த உலகத்தில் மிக சிறந்த மருந்து எதுவும் கிடையாது.
நீங்கள் சிரித்து வாழ்வதற்காக இந்த பதிவில் நாங்கள் நிறைய கடிஜோக்குகளை கொடுத்தாலும் இதை பார்த்து நீங்கள் சிரித்து வாழ வேண்டும்.நீங்கள் மட்டும் சிரிக்காமல் உங்கள் நண்பர்களும் சிரிக்க வைப்பதற்கான சில புகைப்படங்களுடன் கடி ஜோக்களை இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை டவுன்லோட் செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து சிரித்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.
kadi jokes in tamil latest
kadi jokes in tamil with answers
1.எதிரி நாட்டு அரசனை எப்படி பின்வாங்கச் செய்தீர்கள்
குறவன், குறத்தியை அனுப்பி தான் “பின்” வாங்க வெச்சோம்.
2.எதுக்கு பஸ் ஸ்டாண்ட்ல நின்னுகிட்டு மேலேயே பார்த்துகிட்டு இருக்க?
மதுரை பஸ் நாலு மணிக்கு “மேல” வரும்னு சொன்னாங்க, அதுதான்!
3.கடி ஜோக்ஸ் கேள்வி: பாம்பிற்கும், ஷாம்பிற்க்கும் என்ன வித்தியாசம்?
ஷாம்புவ நம்ம போட்டா தலையில் நுரை வரும். பாம்பு நம்பள போட்டா வாயில நுரை வரும்.
4.பில்கேட்ஸ் கிட்ட போய் உட்கார் என்று சொன்னா, அவர் உட்கார மாட்டாரு! ஏன் தெரியுமா? தெரியலையே!
ஏன்னா, அவருக்கு தமிழ் தெரியாதுல்ல!
5.எதுக்குமா குழந்தைக்கு சாப்பாட்டில் ஷாம்பூவை கலந்து கொடுத்த?
ஷாம்பூல புரோட்டின் அதிகம் இருக்கிறதா டி.வி விளம்பரத்தில சொன்னாங்க, டாக்டர். அதனால கொடுத்தேன்.
6.நீ வாழைப்பழம் திருடுறதை உங்க அப்பா பார்த்துட்டாரே. அப்புறம் என்ன செஞ்சாரு?
வீட்டுக்கு வந்து “தோலை” உரிச்சிட்டாரு.
7.போலீஸ் : ஏன்யா திருடன் வரும்போது உங்க வீட்டில் கத்தி கூச்சல் போடலையா??
நபர் : எங்க வீட்ல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார் எங்களால் தான் கூச்சல் போடா முடியும்.
8.ஆசிரியர் : நம்ம பள்ளியில் 5 மாடிகள் இருக்குது. ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுக்கள் இருக்கு ஐந்தாவது மாடிக்கு போகணும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும்.
கடி ஜோக்ஸ் விடுகதைகள்
மாணவன் : எல்லா படிகளையும் ஏறணும் சார்.
9.லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?
Letterஆ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிடு கிழிப்போம்.
10.ரொம்ப நீளமான Music Instrument எது?
புல்லாகுழல்
11.ஒரு மாமி இட்லியை தலைல வெச்சி இருங்க ஏன்?
ஏன்னா அந்த இட்லி மல்லி பூ போல இருந்திச்சாம்.
12.Costlyஆன கிழமை எது?
“வெள்ளி” கிழமை
13.குடிக்க முடியாத டீ எது?
கரண்டி
14.வேலைக்கு போற விலங்கு எது?
பனி கரடி
15.நாம ஏ படுத்துக்கிட்டே தூங்குறோம்?
நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.
16.கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?
அதுகிட்ட நம்ம வீட்டு Address கொடுக்காம இருக்கணும்.
17.முட்டையே போடாத பறவை என்ன பறவை?
ஆண் பறவை
18.கீழே விழுந்தாலும் காயமடையாதது எது?
மழை
19.எந்த வில்லை கட்ட முடியாது?
வானவில்
20.ஒரு பச்சைக் கல்லை கடலில் எறிந்தால் அது என்னவாகும்?
ஈரமாகும்