கடுக்காய் பொடி பயன்கள் | Kadukkai Podi Benefits in Tamil
கடுக்காய் என்பது துவர்ப்பு சுவை உடையது இது நம் உடம்பில் உள்ள ரத்தத்தில் இருக்கிற அழுக்குகள் எல்லாத்தையும் சுத்தமாக நீக்கிடும். சில பேருக்கு நாக்குல சுவை இல்லாமல் இருக்கும் இந்த கடுங்காயை சாப்பிட்டால் ருசி உருவாக்கும் தன்மை உடையது இந்த கடுக்காய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தக் கடுக்காய்காயை எடுத்துக் கொள்ளலாம் இந்த கடுக்காய் நாட்டு மருந்து கடையில் கடுங்காய் பொடி என்று கேட்டாள் கிடைக்கும். இந்த கடுக்காய் பொடியை ஆறு மாதம் வரைக்கும் பயன்படுத்தலாம்.
இரவு நம் படுக்கும் போறதுக்கு முன் ஒரு அரை ஸ்பூன் கடுக்காய் பொடியை எடுத்து ஒரு முக்கால் டம்ளர் அளவிற்கு வெந்நீரில் விட்டு இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி தொடர்ந்து குடித்து வந்தால் உடலை உள்ள உஷ்ணம் குறையும்.
இந்த கடுக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் பெண் பொடுகு தொல்லை சரியாகும். கடுக்காய் பொடியின் நீரை தொடர்ந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.
ஆனால் இது கெட்ட பாக்டீரியாக்களை கொண்டு அந்த துர்நாற்றத்தை போக்கும் பல் வலி ஈறு வலி இந்த மாதிரி உள்ளவர்கள் கடுக்காய் பொடியை வைத்து பல் மேல் தேய்த்து வந்தால் பல் உறுதி ஆகும். கர்ப்பமான பெண்கள் இந்த கடுக்காய் பொடியை எந்த முறையிலும் சாப்பிடவோ பயன்படுத்தவோ கூடாது.
கடுங்காயின் மருத்துவ பயன்கள்
கடுக்காய் பொடி 15 கிராம், 5 கிராம்பு பொடி சேர்த்து வெந்நீரில் கலக்கி வடிகட்டி அதனுடன் 1 ஸ்பூன் நெய் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை தணிக்கும், இறப்பையே பலப்படுத்தும், ரத்தத்தை சுத்திகரிக்கும் வாரத்துக்கு ஒரு முறை சாப்பிட்டு வரலாம்.
கடுக்காய் பொடியுடன் பல்பொடி சேர்த்து பல் துலக்கி வந்தால் பற்களில் ரத்தம் கசிதல் ஈறு வீக்கம் பல் வலி ஆகியவை குணமாக்கும்.
கடுக்காய் பொடியுடன் சிறிதளவு மலை வேம்பு சாற்றை கலந்து ஆறாத புண் மேல் தடவினால் ஆறாத புண்களும் ஆறும்.
கடுக்காய் பொடி துளசி விதை பொடி சுக்கு பொடி இவை அனைத்தும் சம அளவு எடுத்து இதனுடன் சிறிதளவு பால் கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
இதுபோன்ற ஈரல் நோய் குஷ்டம் வயிற்று வலி தொண்டை நோய் காமாலை போன்ற நோய்களும் கடுக்காய் பொடி குணப்படுத்தும்.
கடுக்காய் முகத்திற்கு பயன்கள்
கடுக்காய் பொடி முகத்திற்கு பயன்படும் நன்மைகள்
கடுக்காய் பொடி நம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய பொடியாகும். கடுக்காய் பொடியை இரவு நாம் உண்ட பிறகு ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியை எடுத்து தின்றுவிட்டு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால் உடல் பலம் கிடைக்கும்.
கடுக்காய் பொடி தேன்
இந்த கடுக்காய் பொடியுடன் சிறிது தேன் கலந்து தொடர்ந்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் உங்களுடைய வயதான தோற்றத்திலிருந்து விடுபடுவீர்கள். இதே போல் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் தோல் சுருக்கம்,வயதான தன்மை, முதுமை தன்மை மற்றும் நரை முடி போன்றவையிலிருந்து அனைத்தும் குணமாகும்.
கடுக்காய் பொடி உண்ணும் முறை
கடுக்காய் சுவை துவர்ப்பு சுவை உடையது நம் உடலுக்கு அறுசுவையும் சரி வர தரப்பட வேண்டும். நம் அனைத்து சுவையும் சாப்பிடுவோம் ஆனால் துவர்ப்பு சுவையை கம்மியாக எடுத்துக் கொள்ளுவோம் ஆனால் இந்த துவர்ப்பு சுவை நம் ரத்தத்தை விருத்தி செய்யும் அது மட்டுமல்ல நமக்கு ஏற்படும் பல நோய்களிலிருந்து பாதுகாப்பது இந்த கடுக்காய்.
கடுக்காய் பொடி எப்போது சாப்பிட வேண்டும்; விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்று சொல்லி கேட்டிருப்பீர்கள். மற்ற மிருகங்களுக்கு எல்லாம் இத்தனை நாட்கள் தான் என எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கு. ஆனால் இந்த கடுக்காய் பொடி நம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கடுக்காய் பொடியின் தரம் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். மருந்து கடைகளில் கடுக்காய் பொடியை நன்றாக கவனித்து வாங்க வேண்டும். இந்த கடுக்காய் பொடியை தினமும் ஒரு கிராம் அளவுக்கு எடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.
கடுக்காய் பொடியின் தீமைகள்
கடுக்காய் பக்க விளைவுகள்
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அதை போல் இந்த கடுங்காயை அதிகமாக உட்கொள்வதால் வயிற்றில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம் இதனால் வயிற்று வலி வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் குடல் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தக் கூடியது. நீரிழிவு நோயாளிகள் கடுக்காய் பொடியை சாப்பிடுவது நல்லதல்ல. காரணம் இது உடலில் உள்ள ரத்தத்தின் அளவை குறைக்கிறது. கர்ப்பமானவர்களும் கடுக்காய் பொடியை தவிர்க்க வேண்டும் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் கடுங்காயே பயன்படுத்தக் கூடாது.