கழுகு கனவில் வந்தால் என்ன பலன் | Kaluku Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
இந்த உலகத்தில் பல பறவைகள் இருக்கிறது அதிலும் ஒரு சில பறவைகளை பார்த்தால் நமக்கு பயமாக இருக்கும். அந்த வகையில் கழுகு கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கழுகு கனவில் வந்தால் என்ன பலன்
கழுகு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு உறவினர் மற்றும் நண்பர்கள் முன்பு நல்ல மரியாதை கிடைப்பதையும் மற்றவர்களை ஆள்வதற்கான ஆளுமை திறன் உங்களுக்கு இருப்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது.
கழுகு பறப்பது போல் கனவில் வந்தால்
கழுகு பறப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு எல்லா விஷயமும் சாதகமாக நடக்கும். நீங்கள் வாழ்வில் நினைத்த காரியத்தை செய்து முடித்து விடுவீர்கள். எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் வெற்றி கிடைத்து உங்களுக்கு மகிழ்ச்சி தரும்.
வீட்டில் கழுகு இருப்பது போல் கனவில் வந்தால்
வீட்டில் கழுகு இருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கோ அல்லது உங்கள் உறவினருக்கோ குழந்தை பிறக்க இருப்பதை இந்த கனவு உணர்த்துகிறது. தொழில் செய்து கொண்டு இருப்பவராக இருந்தால் அதில் நல்ல லாபம் கிடைக்க இருப்பதையும் வேலை தேடுபவராக இருந்தால் நல்ல வேலை கிடைப்பதற்கும் இந்த கனவு உணர்த்துகிறது.
கருடன் கனவில் வந்தால் என்ன பலன் |
கூண்டில் இருக்கும் கழுகு கனவில் வந்தால்
கூண்டில் இருக்கும் கழுகு கனவில் வந்தால் கனவு காண்பவரை பிறர் அவமானப்படுத்த இருப்பார்கள்.அதனால் உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
கழுகு தாக்குவது போல் கனவில் வந்தால்
கழுகு தாக்குவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் எந்த ஒரு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள தைரியம் இல்லாமல் இருப்பதை இந்த கனவு உணர்த்துகிறது.
இறந்த கழுகு கனவில் வந்தால்
இறந்த கழுகு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும் தோல்வி மற்றும் ஏமாற்றங்களை பற்றி இந்த கனவு உணர்த்துகிறது. எந்த ஒரு செயலை செய்தாலும் கவனத்துடன் பொறுமையாக செய்ய வேண்டும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன் |
காகம் கனவில் வந்தால் என்ன பலன் |
மயில் கனவில் வந்தால் என்ன பலன் |
கோழி கனவில் வந்தால் என்ன பலன் |