காமராஜர் வாழ்க்கை வரலாறு | kamarajar history in tamil
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நம் முன்னாள் முதலமைச்சர் மற்றும் கல்வி கண் திறந்த காமராஜரை பற்றி பார்க்க இருக்கிறோம். இவர் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகள் செய்துள்ளார்.
காமராஜர் பிறந்த நாள்
காமராசர் தமிழ்நாட்டில் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார்.காமராசருக்கு முதலில் அவரது குலதெய்வ சாமி காமாட்சியின் பெயர் தான் வைத்துள்ளனர். காமராசரின் தாயார் சிவகாமி அம்மாள் மட்டும் அவரை ராசா என்று அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் காமராசு என மாறியது.
காமராஜர் பற்றிய கட்டுரை
காமராஜர் சிறை வாழ்க்கையும் படிப்பும்
காமராசர் தனது பள்ளி படிப்பை சத்திரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார் காமராசர் படிக்கும் பொழுது மிகவும் பொறுமையாகவும் விட்டுக் கொடுக்கும் மனதுடன் சிறந்து விளங்கினார்.வறுமையினால் தனது பள்ளி படிப்பை தொடர முடியாமல் தனது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சென்றார்.
வேலை செய்து கொண்டிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேச தலைவர்களின் பேச்சுகளில் கவரப்பட்டு சுதந்திரப் போராட்டங்களில் ஆர்வம் காட்டினார். காமராசருக்கு 16 வயது இருக்கும்போது காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக ஆனார்.
காமராசரின் தலைமையில் 1930 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் காமராசரை கைது செய்யப்பட்டு கல்கத்தாவில் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.காமராசர் கைதான அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து 1940 ஆம் ஆண்டு மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.வேலூர் சிறையில் இருக்கும் பொழுது காமராசரை விருதுநகர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 9 மாதங்கள் கழித்து வேலூர் சிறையில் இருந்து விடுதலாகி நேராக சென்று தனது தலைவர் பதவியில் இருந்து விலகினார்.காமராசருக்கு மக்களுக்கு முழுவதுமாக பணியாற்ற வேண்டும் என்பது கொள்கையாகும்.
காமராசர் 1942 அகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காக மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த முறை இவர் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தார்.
காமராஜர் புகைப்படம்
காமராஜர் பொன்மொழிகள்
காமராசர் சிறையில் இருக்கும் பொழுது பலவித பொன்மொழிகள் எழுதி உள்ளார். காமராசர் எழுதிய பொன்மொழிகளின் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1.ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்.!
- எந்தவித அதிகார வர்க்கத்தில் இருந்தாலும் பொறுப்பு உணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.. பொறுப்பு உணர்சி இல்லாத அதிகாரம் நிலைக்காது.!
காமராஜர் கவிதைகள்
காமராசர் சிறையில் இருக்கும் பொழுது பல பொன்மொழிகள் மற்றும் கவிதைகள் என நிறைய எழுதியுள்ளார் அதில் ஒரு சில கவிதைகளின் தலைப்பை கீழே கொடுத்துள்ளோம்.
1.நாடு உயர்ந்தால் நாமும் உயர்வோம்.
2.தாய்மார் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது.!
காமராஜர் மதிய உணவு திட்டம்
காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவு என்ற திட்டத்தை கொண்டு வந்தார். மாணவர்கள் அனைவரும் ஒருவேளை உணவுக்காக பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள் முதலில் இந்த மதிய உணவு திட்டத்தை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆரம்பித்தார் அதை தொடர்ந்து மேலும் நான்கு பள்ளிகளில் இந்த திட்டத்தை விரிவு படுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிகமாக பள்ளிக்கு வர ஆரம்பித்தனர்.
மாணவர்களை படிக்க வைப்பதற்காக காமராசர் இந்தத் திட்டத்தை தமிழக முழுவதும் அறிமுகப்படுத்தினார் தொடர்ந்து இந்த திட்டத்தை எம் ஜி ராமச்சந்திரன் 1980 ஆம் ஆண்டுகளில் விரிவு படுத்தினார்.மதிய உணவு திட்டத்தின் படி பள்ளிகளின் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. இதன் மூலம் 180 நாட்கள் பள்ளி வேலை நாளாக இருந்தது மதிய உணவு திட்டத்தின் மூலம் 200 நாளாக உயர்த்தப்பட்டது.
காமராஜர் வாழ்க்கை வரலாறு
காமராசர் 1953 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று தமிழக முதலமைச்சராக முதன்முதலில் பதிவேற்றார். காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழகத்தில் அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளின் எண்ணிக்கையை 27,000 ஆக அதிகரித்தார். 1920 ஆம் ஆண்டு நிதி கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார்.
காமராசர் முதலமைச்சராக பதவியேற்ற காலத்தில் நாட்டு முன்னேற்றம் நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் கல்வி தொழில் வளத்துக்கு முன்னுரிமை அளித்து வந்தார். காமராஜரின் ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர் பாசன திட்டங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பவானி திட்டம்,மேட்டூர் கால்வாய் திட்டம்,காவேரி டெல்டா வாடிக்கால்,அபிவிருத்தி திட்டம்,மணிமுத்தாறு, அமராவதி,வைகை,பரம்பிக்குளம்,ஆழியாறு பாசன திட்டம்,சாத்தனூர்,கிருஷ்ணகிரி.ஆரணியாரு ஆகிய திட்டங்களை நிறைவேற்றினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமத்தில் வாழும் மக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக மாத்தூர் தொட்டி பாலம் காமராசர் கட்டப்பட்டது. இந்த தொட்டி பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டி பாலாகமாக இன்றளவும் இருந்து வருகிறது.
காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் மக்களின் வேலைகளை உறுதிப்படுத்துவதற்காக பல தொழில் நிறுவனங்களை தொடங்கி வைத்தார்.
- பாரத மிகு மின் நிறுவனம்
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
- மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
- இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
- நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
- கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
- மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
காமராஜர் பாரத ரத்னா விருது
காமராசர் முதலமைச்சராக பதவி ஏற்று 9 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். காமராசர் நேர்மைக்கும் பெயர் பெற்ற அவர் தென்னாட்டு காந்தி என்றும் புகழ் படுத்தப்பட்டது. காமராசர் மறைவுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
காமராஜர் தேர்தல் தோல்வி
காமராஜர் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் தனது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் நின்றார் அங்கு காமராசர் எதிராக பெ.சீனிவாசன் என்பவர் 1285 வாக்குகள் வித்தியாசத்தில் காமராசரை தோற்கடித்தார்.1969 ஆம் ஆண்டு நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
காமராஜர் அகில இந்திய காங்கிரசு தலைமை
காமராசர் தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராசர் தன் பதவியை விட தேசப்பணியும் கட்சிப் பணியும் முக்கியம் என்பதை மக்களுக்கு கட்சி தொண்டர்களுக்கும் காட்ட விரும்புவதாகவும் k-plan என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.இந்தத் திட்டத்தின் படி கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களின் பதவிகளை இளைஞர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதற்காக காமராசர் தனது முதலமைச்சர் பதவிப் பொறுப்பை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு தேசப்பணிக்காக டெல்லி சென்றார்.அக்டோபர் 9 ஆம் தேதி காமராஜருக்கு அகில இந்திய காங்கிரஸின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
காமராஜர் நினைவுச் சின்னங்கள்
காமராசர் இறந்த பிறகு அவரை நினைவுபடுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் காமராசரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் காமராசரின் நினைவு கூறும் வகையில் நினைவிடம் அமைத்துள்ளது அங்கு காமராசரின் மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.அந்த நூலகத்தில் காமராஜரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
காமராஜர் திரைப்படங்கள்
காமராஜர் ஒரு சிறந்த முதலமைச்சர் ஆக இருந்ததால் 2004 ஆம் ஆண்டு காமராஜர் என்ற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் ஒரு திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தை 2007 ஆம் ஆண்டு குறுந்தகடு என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
காமராஜர் இறப்பு
காமராசருக்கும் இந்திரா காந்திக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் நிலைக்கு தள்ளப்பட்டது. காமராசரின் தலைமையில் சிண்டிகேட் காங்கிரஸ் தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தார். ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி தமிழகத்தில் அதிகரித்துள்ளதால் காமராசரின் சிண்டிகேட் காங்கிரஸ் வளர்ச்சி பின் தங்கியது இதனால் காமராஜர் தனது அரசியல் பயணத்தை தமிழகத்தோடு மட்டும் வைத்துக் கொண்டார்.
1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி திங்களன்று காமராசர் மதிய உணவு அருந்திவிட்டு சிறிது உறங்கினார் அந்த உறக்கத்தின் போது அவர் உயிர் பிரிந்தது. அவர் இறந்தபோது அவரது சட்டை பையில் சிறிதளவு பணத்தை தவிர வேறு எதுவும் வங்கிக் கணக்கோ,சொந்த வீடோ,வேறு எந்தவித சொத்தும் இல்லை காமராசர் தன் வாழ்நாள் இறுதிவரை வாடகை வீட்டிலே வசித்தார்.தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்து விட்டு இந்த மண்ணை விட்டு மறைந்தார்.