கணக்கன்பட்டி சித்தர் பற்றிய முழு தகவல்கள் | Kanakkanpatti Siddhar
தமிழ்நாட்டில் இருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று முருகன் கோவில்.முருகன் கோவில்கள் ஆறுபடை வீடுகளாக பிரித்து இருக்கின்றன.முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று தான் பழனிமலை.இந்த பழனிமலைக்கு அருகில் இருக்கும் ஊர் கணக்கன்பட்டி.மேலும் இந்த ஊரில் இருக்கும் சித்தரை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
பழனி கணக்கன்பட்டி
பழனியில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கணக்கன்பட்டி.இந்த கணக்கன்பட்டியில் வாழ்ந்த சித்தரை பற்றி பார்ப்போம்.கணக்கன்பட்டி சித்தர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிறந்தவர்.இவருடைய இயற்பெயர் பழனிச்சாமி.
இவர் தன்னுடைய வாழ்க்கையை பொதுவாழ்வில் அர்ப்பணித்துக் கொண்டு இவர் தினமும் கடவுளுக்காக பணியாற்றுவார்.இவருடைய உடல் முழுவதும் பச்சை நிறம் கொண்ட சட்டை மற்றும் அழுக்கான வேட்டியை மட்டுமே இவர் அணிந்திருப்பார்.அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு பெரிய மூட்டையை வைத்துக் கொண்டு இருப்பார்.
அதனை எங்கு சென்றாலும் தூக்கிக் கொண்டே செல்வார்.அந்த மூட்டையை யாரேனும் தொட வந்தால் மிகவும் கோபமாக கத்தி அவர்களை விரட்டி விடுவார்.கடவுளின் அனுகிரகத்தினால் பல்வேறு வகையான அற்புதங்கள் நிகழ்த்தி பிறகு ஜீவ சமாதியும் அடைந்து விட்டார்.
கணக்கன்பட்டி செல்லும் வழி
பழனியிலிருந்து திண்டுக்கல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பழனியில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.கடல் மட்டத்திலிருந்து 503 மீட்டர் உயரம் உள்ளது.
கணக்கன்பட்டி சித்தர் கோவில்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவுக்கு உட்பட்ட கணக்கன்பட்டி கிராமத்தில் அழுக்கு மூட்டை சித்தர் சமாதி அமைந்து உள்ளது.இங்கு அவருடைய பக்தர்கள் ஆலயம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.மேலும் இவரை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு செல்வதை வழக்கமாக வைத்தியிருக்கின்றனர்.
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி |
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி |
காலை 7 மணிக்கு சிறப்பு மண்டல பூஜை |
கணக்கன்பட்டி சித்தர் வரலாறு
கணக்கன்பட்டி சித்தர் எந்த நேரமும் பரட்டை தலையுடனும் அதற்கு மேல் ஒரு துண்டை வைத்து தலப்பா கட்டியிருப்பார்.இவர் பழனியில் இருக்கும் அனைத்து கோவில்களிலும் சுற்றி வருவார்.ஆரம்பத்தில் இவரை கண்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் இவர் ஒரு பைத்தியம் என்று கல்லால் அடித்து விரட்டுவார்கள்.
இவர் அழுக்கு மூட்டையை கையில் வைத்து சுற்றி வருவதனால் இவரை பழனி சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் இவரை மூட்டை சுவாமி என்று அழைப்பார்கள்.பழனியில் இரண்டு பெரிய மலைகள் இருக்கின்றது.அதில் ஒன்று பழனி முருகன் கோவில் மற்ற ஒன்று இடும்பன் கோவில் ஆகும்.இவர் அந்த இடும்பன் கோவிலில் தான் பல வருடங்கள் வாழ்ந்து வந்தார்.
பிறகு பழனி மலைக்கு அருகில் இருக்கும் கணக்கன்பட்டி என்ற ஊரில் சுற்றி வந்தார்.அப்பொழுது ஒரு நாள் மரத்தடியில் அமைந்திருந்த பொழுது அந்த வழியே சென்ற கார் ஒன்றை வழி மறைத்தார்.அந்தக் காரின் உள்ளே வெளிநாட்டிலிருந்து வந்த தம்பதிகள் தன்னுடைய மகனுக்கு வாய் பேச முடியாமல் இருந்ததால் அவர்கள் பழனி மலை முருகனை தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தார்கள்.அவர்களை கணக்கம்பட்டி சித்தர் காரில் இருந்து இறங்க சொன்னார்.
அந்த தம்பதியர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார்கள்.பிறகு காரில் இருந்து இறங்கி வந்த பெண்மணி இடம் கணக்கம்பட்டி சித்தர் எதிரில் இருக்கும் கடையில் போய் ஒரு பிரியாணி வாங்கிட்டு வா என்று கூறினார்.அந்தப் பெண்மணிக்கு வேறு வழி இன்றி ரோட்டிற்கு எதிரே உள்ள ஒரு கடையில் பிரியாணி வாங்கிக் கொண்டு வந்தார்.இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அந்த பெண்மணி மற்றும் அவர்கள் குடும்பம் ஒரு சுத்த சைவ குடும்பம் ஆகும்.அந்த பெண்மணிக்கு பிரியாணி சுவை பிடிக்காமல் மூக்கை பிடித்துக் கொண்டு பிரியாணி வாங்கி வந்தார்.பிரியாணி வாங்கி வந்த பிறகு கணக்கம்பட்டி சித்தர் இந்த பிரியாணியை உன்னுடைய மகனுக்கு கொடு என்று கூறினார்.
அந்தப் பெண்மணி தடுமாற்றத்துடன் வாங்கி வந்து சாப்பாட்டை பிரித்து பார்த்த பொழுது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. அந்தப் பெண்மணி வாங்கி வந்தது பிரியாணி ஆனால் அந்த பட்டணத்தில் இருந்தது சாம்பார் சாதம்.இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த அந்த பெண்மணி அவருடைய குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கணக்கம்பட்டி சித்தரின் காலில் விழுந்து வணங்கி விட்டு பழனியை நோக்கி சென்றார்கள்.அந்தக் குடும்பம் சென்று கொண்டிருந்தபோது.இவர்களை நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்தது.அதனைப் பார்த்த அந்த சிறுவன் அம்மா வண்டி வருது என்று கத்த தொடங்கினான்.இதுவரை அந்த சிறுவன் வாய் பேசாமல் இருந்து அந்த பெண்மணி அந்த சிறுவன் வாய் பேசுவதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அவர்கள் முருகனை தரிசிக்காமல் மீண்டும் திரும்பி வந்து அந்த கணக்கன்பட்டி சித்தரை வணங்கி சென்றார்கள்.இதன்பிறகு கணக்கன்பட்டி சித்தரை கண்ட பிறகு ஏராளமான நன்மைகள் நடந்தது என்று எண்ணற்ற மக்கள் கூறி வருகின்றனர்.