கனவில் பாம்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் | kanavil pambu vanthal
வணக்கம் நண்பர்களே.!! வாழ்வில் ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். தூங்கும் போது கனவுகள் வரும். நமக்கு வரும் கனவுகளில் நல்லது நடப்பது போல் வரலாம்,கெட்டது நடப்பது போலும் வரலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
பாம்பு கனவில் வந்தால் ஒரு வித பயம் தான் இருக்கும். பாம்பு கனவில் வந்தாலே பயமாக தான் இருக்கும் அதிலும் பாம்பு வீட்டிற்குள் வருவது போல் கனவு வந்தால் நமக்கு தூக்கமே வராது அந்த அளவுக்கு பாம்பு கனவில் வந்தால் பயமாக இருக்கும். பாம்பு வீட்டுக்குள் வருவது போல் கனவில் வந்தால் என்ன பலன்கள் இருக்கிறது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கனவில் பாம்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
கனவில் பாம்பு வீட்டிற்கு வந்தால் நீங்கள் நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடுகளை செய்யாமல் இருந்திருக்கிறீர்கள் அதனால் குலதெய்வ வழிபாடு செய்வதற்காக இந்த கனவு உணர்த்துகிறது. பாம்பு வீட்டுக்குள் வருவது போல் கனவு வந்தால் எந்த ஒரு கெடுதலும் நடக்காது கடவுளை வணங்குவதற்கு உங்களை அழைப்பதற்காக இந்த கனவு உணர்த்துகிறது.
கனவில் பாம்பு கடித்தால் என்ன பலன்
கனவில் பாம்பு கடித்தால் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் நீங்கி நீங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள். தொழில் செய்பவராக இருந்தால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் இதுவரை உங்கள் தொழிலில் நஷ்டங்கள் ஏற்பட்டிருந்தால் இனிவரும் காலங்களில் உங்கள் தொழிலில் லாபம் மட்டும் ஏற்படும்.
பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் |
கனவில் பாம்பு வீட்டிலிருந்து வெளியே வருவது போல் வந்தால் என்ன பலன்
கனவில் பாம்பு வீட்டில் இருந்து வெளியே வருவது போல் வந்தால் உங்கள் வீட்டில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல வரன் கிடைத்து திருமணம் நடைபெறும் அல்லது திருமணம் முடிந்து நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
கனவில் கருப்பு பாம்பு வந்தால் என்ன பலன் |
வெள்ளை பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் |
பெரிய பாம்பு கனவில் வந்தால் |
சிறுத்தை கனவில் வந்தால் என்ன பலன் |