கனவில் சில்லறை காசு வந்தால் என்ன பலன் | Kanavil sillarai Kasu vanthal
வணக்கம் நண்பர்களே.!! இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் வரும் கனவுகளில் நல்லது நடப்பது போலும் இருக்கலாம் கெட்டது நடப்பது போல இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.
உங்களுக்கு நிறைய பணம் கிடைப்பது போல் கனவு வந்தால் மறுநாள் இந்த கனவு நிறைவேறினால் நல்லா இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்படி பணம் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கனவில் சில்லறை காசு வந்தால் என்ன பலன்
பொதுவாக சில்லறை கனவில் வந்தால் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும் உங்கள் வாழ்வில் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். பண வரவு அதிகரிக்கும்.உங்கள் தொழிலில் அதிகம் லாபம் கிடைக்கும் வேலை செய்பவர்களாக இருந்தால் வேலை செய்யும் இடத்தில் சம்பளம் உயரும்.
தங்க நாணயம் கனவில் வந்தால்
தங்க நாணயம் கையில் வைத்திருப்பது போல் வந்தால் கனவு காண்பவருக்கு நல்ல நிதிநிலைமை அதாவது பணவரவுகள் அதிகரிக்கும். நீங்கள் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் பேரம் பேசி மிக குறைந்த விலையில் வாங்கி விடுவீர்கள்.
பழைய நாணயம் கனவில் வந்தால்
பழைய நாணயம் கனவில் வந்தால் கனவு காண்பவர் தனக்கு ஒரு நிலையான வருமானம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.பணம் முதலீடு செய்யும் பொழுது கவனமாக செய்வீர்கள் அதனால் உங்களுக்கு பணம் முதலீட்டின் மூலம் லாபம் கிடைக்கும்.
சில்லறையை கண்டெடுப்பது போல் கனவில் வந்தால்
சில்லறையை கண்டெடுப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர்களுக்கு வரவிருக்கும் கவலைகளைப் பற்றி குறிக்கிறது.அதோடு சிறிதளவு மகிழ்ச்சியும் கிடைக்கும்.
கனவில் பணம் கொடுப்பது போல் வந்தால் என்ன பலன்
பணம் கொடுப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் தெரிந்தவர்களுக்கோ அல்லது தெரியாதவர்களுக்கோ பணம் கொடுப்பது போல் கனவு வந்தால் பண இழப்பீடு ஏற்படும் அதாவது தொழில் செய்து கொண்டிருப்பவர்களாக இருந்தால் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படும்.
பணம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்
பணம் வாங்குவது போல் கனவில் வந்தால் கனவு காண்பதற்கு பொருளாதார இழப்பீடுகள் ஏற்படும் அதாவது கொடுக்கல் வாங்கல் போன்ற செயல்களில் ஈடுபடும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
நாய் கனவில் வந்தால் என்ன பலன் |
நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் |
மகாலட்சுமி கனவில் வந்தால் என்ன பலன் |