காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் வரலாறு Kanchipuram Ekambaranathar History in Tamil
வணக்கம் நண்பர்களே.!! காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். 1300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான கோயிலாக கருதப்படுகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
இந்தியாவின் தமிழக மாநில காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகும்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இரண்டாம் நரசிம்ம பல்லாவினால் 1300 ஆண்டுகளுக்கும் முன்னதாக கட்டப்பட்டது என கருதப்படுகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் வரலாறு
ஏகம்பரேஸ்வரர் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். பல்லவர் காலத்திலே சிறப்புற்று இருந்ததாக கருதப்படும் இந்த கோயில் இரண்டாம் நரசிம்மா பல்லவனால் 1300 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
இந்தக் கோயிலில் பல்லவர் காலத்தை தொடர்ந்து நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்ததற்கு ஆதாரமாக பல்வேறு கல்வெட்டுக்கள் இந்த கோயில் வளாகத்தில் காணப்படுகின்றன.இந்தக் கோயிலின் தெற்கு வாசலில் காணப்படும் பெரிய ராஜகோபுரம் விஜய நகர அரசனான கிருஷ்ண தேவராயரால் 1509 ஆம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டின் மூலம் அறிய முடிகின்றது.
நூற்றுக்கால் மண்டபம் விஜய நகர மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகவும் அது பின்பு சோழர் ஆட்சி காலத்தில் ஆயிரங்கால் மண்டபமாக மாற்றப்பட்டதாக தெரிகின்றது.கோயிலில் வெளிப்புறம் அமைந்துள்ள மதில் சுவர்களை 1799 ஆம் ஆண்டு ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.
கோவிலில் பழுதடையப்பட்ட பழைய சிலைகள் உள்ளிட்ட புத்தர் மகா நிர்வாணம் முதலிய சிலைகள் மற்றும் இந்த கோயிலையும் சேர்த்து அனைத்தும் புதுப்பிக்கப்பட்டது.புதுப்பிக்கப்பட்டிருக்கும் இந்த சிலைகளில் சில பகுதியில் மகேந்திரன் காலத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் இருக்கின்றன.
சில இடங்களில் விஜய நகர சின்னங்களும் இருக்கின்றன.கோவிலில் முன் மண்டபத்தில் ஒரு சிலை இருக்கிறது. அந்த சிலையில் தாடி இருப்பதால் அது ஆதித்ய கரிகாலன் உருவம் சிலை என பலரும் கூறுகின்றனர்.
Read Also
திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றிய முழு தகவல் |
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் படங்கள்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் பெருமைகள்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலை மும்மூர்த்திகள் வழிபட்ட கம்பர் அமையப்பெற்றதால் இந்த திரு கோயிலுக்கு திருவேகம்பம் என்று பெயர் கிடைத்தது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பூஜை நேரம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் வழிபாட்டு நேரம் |
|
திறக்கப்படும் நேரம் | மூடப்படும் நேரம் |
காலை 6.00 மணி | நண்பகல் 12.00 மணி |
மாலை 5.00 மணி | இரவு 08.30 மணி |
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பூஜை நேரம் |
|
பூஜாவைக் கூட்டவும் | காலை 6:00 மணி |
உக்ஷகல பூஜை | காலை 6:30 மணி |
கால சாந்தி பூஜை | காலை 7:30 மணி |
உச்சிகால பூஜை | காலை 11:30 மணி |
பரதோச காலம் | மாலை 5:00 மணி |
சாயரட்சை பூஜை | மாலை 6:00 மணி |
அர்த்தஜாம பூஜை | இரவு 8:30 மணி |
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் அருகில் அமைந்துள்ள கோவில்கள்
காஞ்சிபுரம் ஏகாம்பரதநாதர் கோயிலின் அருகே வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சி கைலாசநாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ளதால் இந்த திருக்கோயிலுக்கும் சென்று பக்தர்கள் சாமி தரிசனத்தை பெற்றுக் கொள்ளலாம்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்லும் வழி
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு 1 மீட்டர் தொலைவிலும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்
தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு |
தனுஷ்கோடி பற்றிய சிறப்பு தகவல்கள் |
புத்தர் வாழ்க்கை வரலாறு |
ஆதித்த கரிகாலன் வரலாறு |