கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு | Kannadasan Life History In Tamil
வணக்கம் நண்பர்களே.!!கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியரும் கவிஞரும் ஆவார். கண்ணதாசனின் பாடல்கேட்காதவர்களை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். கண்ணதாசன் கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார்.
கண்ணதாசன் ஆசிரியர் குறிப்பு
பெயர் | கண்ணதாசன் |
இயற்பெயர் | முத்தையா |
பெற்றோர் | சாத்தப்பச் செட்டியார்
விசாலாட்சி ஆச்சி |
பிறந்த ஊர் | சிறுகூடல்பட்டி, காரைக்குடி |
பிறந்தநாள் | 24/6/1927 |
பிறப்பு
கண்ணதாசன் சாத்தப்பச் செட்டியார்,விசாலாட்சி ஆச்சி ஆகியோருக்கு ஜூன் 24,1927 ஆம் ஆண்டு காரைக்குடி சிறுகூடல் பட்டியில் பிறந்தார்.
கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு
முத்தையா என்ற இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல் பட்டியில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆட்சி ஆகியோருக்கு எட்டாவது மகனாக ஜூன் 24,1977 ஆம் ஆண்டு பிறந்தார்.
கண்ணதாசனை சிறுவயதில் சிகப்பு ஆட்சி என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து கொடுத்துக் கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். கண்ணதாசன் தனது ஆரம்பக் கல்வியை சிறு குடல் பட்டியலும், உயர்நிலை பள்ளி எட்டாம் வகுப்பு வரை அமராவதிபுதூரிலும் படித்தார்.
1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பத்திரிக்கை ஆசிரியராக பணிக்குச் சென்ற போது அவர் வைத்துக் கொண்ட புனைப்பெயர் கண்ணதாசன்.
Read Also
பாரதியார் பற்றிய முழு விவரம் |
கண்ணதாசன் திருமண வாழ்க்கை
கண்ணதாசன் பொன்னழகி என்கிற பொன்னம்மாள் என்பவரை 1950 ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொண்டார். கண்ணதாசனுக்கும் பொன்னம்மாளுக்கும் கண்மணி சுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும் அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
கண்ணதாசன் 1951 ஆம் ஆண்டு பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபாலகிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும் ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.கண்ணதாசன் தனது 50 வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு விஷாலி என்னும் மகள் பிறந்தார்.
கண்ணதாசன் சிறப்பு பெயர்கள்
முத்தையா என்ற இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசனுக்கு பல சிறப்பு பெயர்கள் உண்டு.
காரைமுத்துப்புலவர்
வணங்காமுடி
கனகப்பிரியன்
பார்வதிநாதன்
ஆரோக்கியசாமி
கண்ணதாசன் நூல்கள்
கண்ணதாசன் எழுதிய நூல்களை கீழே கொடுத்துள்ளோம்.
அர்த்தமுள்ள இந்துமதம் |
உறவு |
ஆசை |
துன்பம் ஒரு சோதனை |
பாவமாம், புண்ணியமாம்! |
மறுபடியும் பாவம் – புண்ணியம் |
புண்ணியம் திரும்ப வரும் |
விதிப்படி பயணம் |
ஆணவம் |
தாய்- ஒரு விளக்கம் |
மங்கல வழக்குகள் |
கல்லானாலும்…. புல்லானாலும்…. |
நல்ல மனைவி |
நல்ல நண்பன் |
கீதையில் மனித மனம் |
உயர்ந்தோர் மரணம் |
கண்ணனை நினைப்பவர்கள் சொன்னது பலிக்கும் |
பூர்வ ஜென்மம் |
பிற மதங்கள் |
சமதர்மம் |
குட்டித் தேவதைகள் |
உலவும் ஆவிகள் |
சோதனையும் வேதனையும் |
ஒரு கடிதமும் பதிலும் |
அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் II |
இதிகாசங்கள் |
சாதிகள் |
வாசலில் அமீனா நிற்கிறான் |
கண்ணதாசன் கவிதைகள்
கண்ணதாசன் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.
1.“நான் என்று நினைக்காதீர்கள் நினைத்தால்..
ஆண்டவன் தான் என்பதைக் காட்டிவிடுவான்..!”
2.“செயல்படுவோம் நல்லதே நடக்கும் என்ற பொது
நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை நிச்சயம் வளமடையும்..!”
3.“அன்பிலே நண்பனை வெற்றி கொள்.. களத்திலே எதிரியை
வெற்றி கொள்..பண்பிலே சபையை வெற்றி கொள்..!”
4.“எதிரி எப்போதும் எதிரியே..நண்பன் தான்
அடிக்கடி பரிசீலிக்கப்பட வேண்டியவன்..!”
5.“நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே..
உன் வாழ்நாளில் அதன் பலனை காண்பாய்..!”
இறப்பு
கண்ணதாசன் உடல் நலக்குறைவு காரணமாக ஜூலை 24 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரப்படி 10.45 மணிக்கு இறந்தார்.
கண்ணதாசனின் உடலை அக்டோபர் 20ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. கண்ணதாசனின் ர பல லட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 ஆம் ஆண்டு உடலை எரியூட்டப்பட்டது.
இவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்
அப்துல் கலாம் வரலாறு |
கம்பர் பற்றிய முழு விவரம் |
திருவள்ளுவர் பற்றிய முழு விவரம் |
காமராஜர் பற்றிய முழு தகவல்கள் |