கறி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Kari sapuduvathu Pol kanavil vanthal
வணக்கம் நண்பர்களே நாம் ஒவ்வொரு நாளும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமாகும் அதில் பல நல்ல கனவுகளும் பல கெட்ட கனவுகளும் வரும் நாம் நல்ல கனவுகள் அனைத்தும் நடக்க வேண்டும் என்றும் கெட்ட கனவுகள் நடக்க வேண்டாம் என்று நினைப்போம். நம் காணும் கனவிற்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது.
நாம் கனவு காணும் பொழுது அதில் மனிதர்கள் உயிரினங்கள் பொருட்கள் என பல விதமான கனவுகள் நமக்கு வரும் அது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது நம் முன்னோர்கள் நமக்கு பல பலன்களை கூறி உள்ளார்கள். நாம் சாப்பிடுவது போல் கனவு வந்தால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை கீழே விவரமாக பார்ப்போம்.
மட்டன் சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
மட்டன் சாப்பிடுவது போல் கனவில் வந்தால் மனதுக்கு பிடித்த பொருள் கூடிய விரைவில் வாங்கி விடுவீர்கள் உங்கள் மனதிற்கு பிடித்த விஷயம் விரைவில் உங்களுக்கு நடக்கும் வெற்றிகளை நீங்கள் தேடி செல்ல தேவையில்லை வெற்றிகள் உங்களைத் தேடி வரும்.
கறி சாப்பிடுவது போல் கனவு
அசைவம் சாப்பிடுவது போல் கனவில் வந்தால் உடல் ஆரோக்கியம் குறையும் மருத்துவ செலவு அதிகரிக்கும் வீண் விரைவு செலவு ஏற்படும்.
சாப்பிடுவது போல் கனவு வந்தால்
சாப்பிடுவது போல் கனவு வந்தால் ஆபத்து வந்துவிடும் என அனைவரும் நினைக்கிறார்கள் ஆனால் சாப்பிடுவது போல் கனவு வந்தால் அவர்களுக்கு நல்லது தான் நடக்கும் எந்த ஒரு இழப்பும் நடக்காது.
கோழி இறைச்சி கனவில் வந்தால் என்ன பலன்
கோழி இறைச்சி கனவில் வந்தால் உடல்நிலை நிலை குறைகள் அல்லது ஏதேனும் நோய்கள் வர இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.அதனால் கோழி இறைச்சி கனவில் வந்தால் உடல் நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
விலங்குகளை கொன்று சாப்பிடுவது போல் கனவு வந்தால்
விலங்குகளை கொன்று சாப்பிடுவது போல் கனவு வந்தால் அது வீண் விரைவு செலவை ஏற்படுத்தும் உங்களுக்கு தீமை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
அசைவம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
அசைவம் சாப்பிடுவது போல் கனவில் வந்தால் ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இறந்த மீன் கனவில் வந்தால்
இறந்த மீன் அல்லது கருவாடு கனவில் வந்தால் நமக்கு பிடிக்காதவர்களிடமிருந்து நமக்கு தொல்லைகள் அதிகரிக்கும்.
முட்டை சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
முட்டை கனவில் வந்தால் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.முட்டை சாப்பிடுவது போல் கனவில் வந்தால் வறுமை உங்களை தேடி வரும்.
புளிப்பான உணவு சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
புளிப்பான உணவு சாப்பிடுவது போல் கனவில் வந்தால் உங்களை பிடித்திருந்த துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.
சூடான உணவு சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
சூடான உணவை சாப்பிடுவது போல் நீங்கள் கனவு கண்டால் உங்கள் மனதில் நினைத்திருக்கும் ஆசை விரைவில் நடைபெறும்.
இனிப்பான உணவு சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
இனிப்பான உணவு சாப்பிடுவது போல் கனவில் வந்தால் உங்களது வாழ்க்கையில் இனிப்பான செய்திகள் உங்களைத் தேடி வரும்.
காரமான உணவு சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
காரமான உணவு சாப்பிடுவது போல் கனவில் வந்தால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு அதிகரிக்கும் அல்லது சம்பளம் உயர்வு அதிகரிக்கும்.
இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்-கனவு பலன்கள்