கரிசலாங்கண்ணி பயன்கள்
இந்த கரிசலாங்கண்ணி ஒரு நாளைக்கு ஐந்து இலை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதில் ஸ்டிக்மான்ஸ்டீரால் ஏக்லிப்டால் டெஸ்மித் தைல் ஹென்ட்ரை போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளது கரிசலாங்கண்ணியில் இரும்புச்சத்து விட்டமின் ஏ தங்கச்சத்து போன்ற சத்துக்கள் இந்த மூலிகையில் அடங்கியுள்ளது இதில் தங்க சத்துக்கள் உள்ளதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவு பெறும்.
கரிசலாங்கண்ணி பொடி பயன்கள்
கரிசலாங்கண்ணி இலையை காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் இந்த கரிசலாங்கண்ணி பொடியுடன் மிளகு ஏலக்காய் தோலையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அரை லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் 50 கிராம் கரிசலாங்கண்ணி தூளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் இரண்டு நாட்கள் கழித்து அந்த எண்ணையை வடிகட்டி தலைமுடிக்கு தடவி வந்தால் கருப்பாகும் அடர்த்தியாகவும் வளரும் இளநரைகள் இருந்தாலும் நீங்கும்.
கரிசலாங்கண்ணி கீரை நன்மைகள்
கரிசலாங்கண்ணி இலைச்சாறு இரண்டு துறை எடுத்து காதில் விட்டால் காது வலி சரியாகும் கரிசலாங்கண்ணி இலையை தேள் கடிச்ச இடத்தில் தேய்த்து அதை அப்படியே கட்டி வைத்தால் அதனுடைய நச்சு நீங்கும் இலையை வேகவைத்து ஆவி பிடித்தால் மூலநோய் குணமாகும் கரிசலாங்கண்ணி இலை மற்றும் நல்லெண்ணெய் இரண்டையும் சேர்த்து அரைத்து யானைக்கால் நோய் உள்ள இடத்தில் பூசலாம்.
கரிசலாங்கண்ணி முடி வளர
கரிசலாங்கண்ணி இலை பயன்படுத்தினால் தலைமுடி அடர்த்தியாக வளரும் மற்றும் முடி கருமையாகவும் செழிப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும் பெண்களுக்கு முடி வளர தேங்காய் எண்ணெய் 300 கிராம் அதனுடன் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றை கலந்து காய்ச்சி வெதுவெதுப்பான சூட்டில் எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்கு தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும் மற்றும் கரிசலாங்கண்ணி சாற்றை தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் நரைமுடி மாறும் முடி அடர்த்தியாகவும் வளரும் வழுக்கை நீங்கும்.