Homeஆன்மிகம்கனவு பலன்கள்கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

கர்ப்பமாக இருப்பது போல் கனவு காண்பவர்களின் சூழ்நிலையைப் பொறுத்து கனவு பலன்கள் பல்வேறு விதமாக வேறுபடுகின்றது. கனவு காண்பவர் ஆணா? பெண்ணா? திருமணமானவரா? திருமணம் ஆகாதவரா? என்பதைப் பொறுத்தும் அதற்கான பலன்கள் வேறுபடும்.

ஆகையால் பதிவ முழுமையா பாருங்க. அப்பதான் என்னுடைய முழுமையான கருத்துக்களை நீங்க தெரிஞ்சுக்க முடியும்.

பொதுவாவே கர்ப்பமாக இருப்பது போல ஒருத்தர் கனவு கண்டனா அது ஏதாவது ஒரு புதிய தொடக்கத்தையோ, வாழ்க்கையில அவங்களுக்கு நிகழ இருக்கக்கூடிய மாற்றத்தையோ அல்லது ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு அவங்க குடியேற போகின்றார்கள் என்பதையோ குறிக்கக்கூடிய விதமாக தான் கருதப்படும்.

உங்க கனவு மூன்று திருமணமான பெண்கள் தங்களுடைய கனவுல தான் கர்ப்பமாக இருப்பதை பரிசோதனை செய்வது போன்று கனவு கண்டாலும், அல்லது மருத்துவரிடம் சென்று மருத்துவர் பரிசோதனை செய்வது போன்ற கனவு கண்டாலும், அல்லது உங்களுடைய கனவில் மருத்துவர் உங்களுடைய வீட்டிற்கே வந்து உங்களை பரிசோதனை செய்து நீங்க கர்ப்பமாக இருக்கீங்கன்னு சொல்வது போன்று நீங்க கனவு கண்ட இவை அனைத்துமே கண்டிப்பா பலிக்கும்ங்க.

கர்ப்பமாக இருக்கக்கூடிய ஒரு பெண், தன்னுடைய கனவு, தனக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய வலி வருவது போன்ற கனவு ஏற்பட்டது. அவங்க உடல் ரீதியா ஏதோ ஒரு வலியை சுமந்துகிட்டு இருக்காங்க என்பதற்கான பிரதிபலனாக பார்க்கப்படுகிறது. ஆகையால் நீங்கள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது ரொம்பவுமே நல்லதுங்க.

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கக்கூடிய ஒரு பெண், தன்னுடைய கனவுல தன்னுடைய முதல் குழந்தையை மறந்துவிடுவது போல கனவு கண்டார். அவங்க அந்த குழந்தையை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். ஆகையால் உங்களுடைய முதல் குழந்தையின் மீதும் நீங்க முழுமையான கவனம் வைத்து அவங்கள பாத்துக்கோங்க.

உங்களுடைய கனவுல நீங்க இன்னொரு கர்பமான பெண்ணிற்கு பிரசவம் பார்ப்பது போன்று கனவு கண்டங்கன்னா, நீங்க வெகு நாட்களாக முயற்சி செஞ்சுகிட்டு இருந்த ஒரு விஷயம் உங்களுக்கு கைகூடி வரப்போகுது என்றுதான் அர்த்தம். அதாவது நீங்கள் எதிர்பார்த்த உங்களுடைய இலக்கை நீங்க அடையப் போகின்றீர்கள் என்பதைக் குறிப்பதாக கருதப்படுகின்றது.

உங்களுடைய கனவில் நீங்கள் கர்ப்பமாக இருப்பது போன்று கனவு கண்டு, அதே போன்று உங்களுடைய கர்ப்பத்தினால் நீங்கள் ரொம்பவுமே உற்சாகமாக இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் உங்களுடைய தாய்மை நிலையை மனத்தளவில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றீர்கள் என்பதைக் குறிப்பதாக அர்த்தம்.

வயதான ஒருத்தவங்க தான் கர்ப்பமாக இருப்பது போன்று கனவு கண்டால், அவங்களுடைய இளமை வயசுல அவங்க கர்ப்பம் தரிக்காததனால, அவங்க மனசுக்குள்ள ஏற்பட்ட மன ரீதியான கவலையை உணர்த்தும் கனவாக தான் இது பார்க்கப்படுகின்றது.

திருமணமான பெண்கள் தங்களுடைய கனவில் தான் கர்ப்பமாக இருப்பது போன்று கனவு கண்டால், நீங்க எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயம் உங்களுக்கு நடக்கப் போகிறது என்றும், நீங்கள் வாழ்க்கையில ரொம்ப நாளா ஒரு செயலை செய்யணும்னு நினைச்சுக்கிட்டே இருந்துருப்பீங்க. அந்த செயலை நீங்கள் இப்போது செய்து முடிப்பதற்கான காலம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் விதமாகவும் பார்க்கப்படுகின்றது.

உங்களுக்கு தெரியாத ஒருவர் கர்பமாக இருப்பது போல நீங்க கனவு கண்டுங்கனா உங்களுக்கு திருமணமாகி வெகு நாட்கள் ஆகியும், உங்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்ததால குழந்தை வரம் வேண்டும் என்கின்ற ஏக்கத்தில் நீங்க இப்படி ஒரு கனவைக் கொண்டிருப்பதாகதாங்க அர்த்தம்.

திருமணம் ஆகாத பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

திருமணம் ஆகாத பெண் தான் கர்ப்பமாக இருப்பது போல கனவு கண்டால். அதாவது அந்த பெண் தனக்கு பொருத்தமான ஆண் துணையை தேடுகின்றார்கள் என்பதற்கான அர்த்தமாக தான் பார்க்கப்படுகின்றது.

ஆண் கர்ப்பமாக இருப்பது போல் கனவில் வந்தால்

ஒரு பெண் தன்னுடைய கனவுல ஒரு ஆண் கர்ப்பமாக இருப்பது போல கனவு கண்டங்கன்னா, அவங்க அவங்களுடைய வாழ்க்கையில அனுபவிக்க கூடிய துயரத்தையும், அவங்க மேலும் கனவு காண்பவர் தான் படும் கஷ்டங்களை வேற யாரும் தெரிஞ்சுக்க கூடாதுன்னு அவங்க எண்ணி பயப்படுவதை உணர்த்தும் விதமாகவும் பார்க்கப்படுகின்றது.

கர்ப்பத்தில் குழந்தை இறந்தது போல் கனவில் வந்தால்

ஒரு பெண் தன்னுடைய கனவில் கர்ப்பத்தில் இருக்கக்கூடிய குழந்தை கர்பத்தில் இறந்தது போல் கனவு கண்டாள். ஆனா அவங்க ஏதோ ஒரு திட்டத்தை செயல்படுத்தறதுக்காக வெகு நாட்களாக முயற்சி செய்துகிட்டு இருக்காங்க என்றும், அந்த திட்டத்துல அவங்க தோல்வியை தழுவ போறாங்க என்பதையும் உணர்த்தும் விதமாக பார்க்கப்படுகின்றது. ஆகையால் எதாவது புதிய முயற்சி களோ, எதாவது புதிய தொழிலோ தொடங்கனும்னு நினைச்சிடாதீங்க.அந்த நேரத்துல நீங்க செயல்படுத்தாமல் அதற்கு பிறகு செயல்படுத்துவது தான் உங்களுக்கு வெற்றியை தரும்.

திருமணமான ஒரு பெண் தன்னுடைய கனவுல தான் இரட்டை குழந்தைகளுடன் கர்பமாக இருப்பது போன்ற கனவு கண்டங்கன்னா, அவங்களுடைய வாழ்க்கையில அவங்க ஏதோ ஒரு மோதலைச் சந்திக்க இருக்கின்றார்கள் என்று அர்த்தம். அதாவது அந்த மோதலானது கனவு காண்பவருக்கும் அவருடைய நெருக்கமான நபருக்கும் இடையில் கூட இருக்கலாம். நீங்க தேர்வு செய்ய முயற்சிக்கக்கூடிய இரண்டு எதிரெதிர் கருத்துக்களாக கூட இருக்கலாம்.

திருமணமான ஒரு பெண் தன்னுடைய கனவுல தான் மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருப்பது போன்று கனவு கண்டங்கன்னா, அந்த பெண் ஒரே நேரத்துல பல பிரச்சனைகளை சமாளிக்க றாங்க என்பதற்கான அர்த்தமாக பார்க்கப்படுகின்றது. அதே போல ஒவ்வொரு பிரச்சனையையும் கையாளுவதற்கு ரொம்பவுமே அவங்க கடினமா உழைக்க வேண்டி இருக்கின்றது என்பதையும் உணர்த்தும் விதமாக பார்க்கப்படுகின்றது.

ஒரு பெண் தன்னுடைய கனவுல தனக்குக் குழந்தை பிறப்பது போன்ற கனவு கண்டால், அவங்க ஏதாவது ஒரு புதிய யோசனைத் திட்டம் அல்லது இலக்கை அடையப்போகின்றார்கள் என்பதை உணர்த்தும் விதமாக பார்க்கப்படுகின்றது.

ஒரு பெண் தன்னுடைய கனவுல குழந்தை உதைப்பது போன்ற கனவு கண்டால், அவங்க அவங்களுடைய எல்லா விதமான முடிவுகளையும் சரியா எடுக்கின்றார்கள் என்று அர்த்தம்.அது மட்டும் இல்லைங்க. அவங்க அவங்களுடைய வாழ்க்கையில் திருப்திகரமாக வாழ்கின்றார்கள் என்றும், அந்த பெண்ணின் உடைய உறவினர்கள் அவங்கள நல்ல முறையில பாத்துக் கொள்கின்றார்கள் என்றும் அர்த்தம்.

கர்ப்பமாக இருக்க கூடிய ஒரு பெண் காலையில அவங்களுடைய உடல் ஆரோக்கியம் பலவீனமாவது போன்று கனவு கண்டால் அவங்க ஏதோ ஒரு சுமையை வெகு நாட்களாக தாங்கிக்கொண்டு இருப்பதாக அர்த்தம்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR