கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Karpamaga Irupathu Pol Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
கனவில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் யாராவது கர்ப்பமாக இருப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
கர்ப்பமாக இருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் உங்களுக்கு நடைபெறும்.நீங்கள் வாழ்வில் நீண்ட நாட்களாக ஒரு செயலை செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் அந்த செயலை இப்பொழுது செய்து முடித்து விடுவீர்கள்.
தெரியாதவர்கள் கர்ப்பமாக இருப்பது போல் கனவில் வந்தால்
தெரியாதவர்கள் கர்ப்பமாக இருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் திருமணம் ஆகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்தால் தனக்கும் குழந்தை வரம் வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன் |
ஆண் கர்ப்பமாக இருப்பது போல் கனவில் வந்தால்
ஆண் கர்ப்பமாக இருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் வாழ்வில் படும் துயரத்தை இந்த கனவு உணர்த்துகிறது. மேலும் கனவு காண்பவர் தான் படும் கஷ்டங்கள் வேறு யாருக்காவது தெரிந்து விடுமோ என்று பயப்படுவதையும் இந்த கனவு உணர்த்துகிறது.
கர்ப்பத்தில் குழந்தை இறந்தது போல் கனவில் வந்தால்
கர்ப்பத்தில் குழந்தை இறந்தது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் ஒரு திட்டத்தை செயல்படுத்த அதிக முயற்சி எடுத்தாலும் அந்த திட்டம் தோல்வியிலேயே முடியும் அதனால் எந்த ஒரு திட்டத்தையும் இப்பொழுது செயல்படுத்த வேண்டாம்.
திருமணம் ஆகாத பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
திருமணம் ஆகாத பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் அந்தப் பெண் தனக்கு பொருத்தமான ஆண் துணையைத் தேடுகிறார் என்று அர்த்தம்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
பெண் கனவில் வந்தால் என்ன பலன் |
அக்கா கனவில் வந்தால் |
உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
அம்மா கனவில் வந்தால் என்ன பலன் |