Karuppu Kavuni Rice Benefits in Tamil
கருப்பு கவுனி அரிசி
கருப்பு அரிசி என்றால் தமிழகத்தில் இதற்கு இன்னொரு பெயர் உண்டு.அதுதான் கவுனி கருப்ப அரிசி என்று அழைப்பார்கள்.இந்தக் கருப்பு அரிசி முக்கியத்துவம் சமீப காலமாக அனைவரிடம் சென்றடைந்து இருக்கிறது.இந்த கருப்பு கவுனி அரிசியை இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அதிகம் இருக்கின்றது.மேலும் இந்த கருப்பு அரிசியை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
கருப்பு கவுனி அரிசி தினமும் சாப்பிடலாமா
கருப்பு அரிசியை தினமும் சாப்பிடலாம் இதனுடைய விலை அதிகமாக இருப்பதினால் அனைவராலும் வாங்கி சாப்பிட முடியாது ஒரு காலத்தில் அரசர்களும் அரச குடும்பத்தினர்கள் மட்டுமே இதனை பயன்படுத்தி வந்தார்கள்.இந்த அரிசியில் அதிக மருத்துவ குணம் இருந்ததால் இதனை அனைவரும் சாப்பிட தொடங்கிவிட்டனர்.அரசர்கள் வாழ்ந்த காலத்தில் தட்டுப்பாடு ஏற்பட்ட சாமானிய மக்கள் இந்த அரிசியை பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் இருந்தது.ஏனென்றால் இந்த அரிசியில் அதிகம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது.
கருப்பு கவுனி அரிசி தீமைகள்
கருப்பு கவுனி அரிசியை மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு சாப்பிட்டால் நல்லது.கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதனால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பாதித்தவருக்கு இந்த கருப்பு கவுனி அரிசி அதிகம் சேர்ப்பதனால் அதிகம் வயிற்றுப்போக்கு மற்றும் இறப்பை குடல் விளைவுகள் ஏற்படும்.இந்த கருப்பு கவுனி அரிசியை அதிக அளவு பயன்படுத்தினால் உடலுக்கு தீங்கினை விளைவிக்கும்.
கருப்பு கவுனி அரிசி மருத்துவ குணம்
கருப்பு அரிசியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருக்கிறது இதை இதய நோயை தடுக்கவும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் வீக்கங்களை குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கின்றது.இந்தக் கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கின்றது ஒரு அரை கப் கவுனி அரிசியில் 3 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.இந்த நார் சத்துக்கள் என்னென்ன பிரச்சனைகளை சரி செய்கின்றது.
குடல் அசைவுகளை செரிக்க மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த வயிற்றுப்போக்கு மற்றும் குடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கும் பயன்படுகின்றது.கருப்பு கவுனி அரிசியில் இயற்கையாகவே அதிக அளவில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டிருக்கிறது.இந்த கருப்பு கவுனி அரிசியில் உள்ள சத்துக்கள் உடலில் இருக்கும் கழிவுகளை நீக்க கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை போக்குவதற்கு உதவியாக இருக்கிறது.
கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதனால் குளுக்கோஸ் நீண்ட நேரம் உங்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு இது உதவியாக இருக்கிறது.கருப்பு கவுனி அரிசி போன்ற முழு தானியங்களை உட்கொள்ளுவதனால் உங்கள் உடலில் டைப் 2 நீரிழி அபாயம் குறைகிறது.உங்கள் உடல் எடையை கண்காணிக்க உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது.நீரிழிவு பாதித்தவர்கள் வெள்ளை அரிசியை உண்பதற்கு பதிலாக கருப்பு கவுனி அரிசியை தினமும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் இருக்கும் நீரிழிவை எதிர்த்து போராட உதவியாக இருக்கின்றது.
கருப்பு கவுனி அரிசி சமைப்பது எப்படி
தேவையான பொருட்கள்:
- 1/2 கப் கவுனி அரிசி
- 3/4 கப் தண்ணீர்
- 1/2 கப் சர்க்கரை
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
- 3 தேக்கரண்டி நெய்
செய்முறை:
கருப்பு கவுனி அரிசியை கழுவிய பிறகு பத்து மணி நேரம் போதுமான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பயன்படுத்தப்படும் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும் பிறகு கடாயில் அரிசியை வைக்க வேண்டும் சமையல் பாத்திரத்தை மூடி சமைக்க வேண்டும்.பிறகு அதே வானியில் புதிய துருவிய தேங்காய் சர்க்கரை மற்றும் ஏழை காய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.சர்க்கரையை சேர்த்து பிறகு நல்ல கலவை உடனடியாக மென்மையாகி விடும்.கலவையை ஐந்து நிமிடம் கடாயில் மிதமான சூட்டில் கிரீம் ஆகும் வரை கிளற வேண்டும்.பிறகு தீயை அணைத்து நெய் சேர்த்து விட வேண்டும்.
கருப்பு கவுனி அரிசி உடல் எடை குறைய
அதிகம் உடல் எடை இருப்பவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உங்கள் உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது.இதன் மூலம் உங்கள் உடல் எடை வேகமாக குறையும்.
கருப்பு கவுனி அரிசி கஞ்சி பயன்கள்
நீரிழிவு நோய் உடல் பருமன் வாத நோய் சுண்ணாம்பு சத்து குறைபாடு மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு இந்த கருப்பு கவுனி அரிசி கஞ்சி சிறந்ததாக இருக்கிறது.இதனை எப்படி செய்வது என்று விரிவாக பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- 1/4கவுனி அரிசி
- 1/4தேங்காய் பால்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
கருப்பு கவுனி அரிசியை முதலில் இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரில் அலசி கொள்ள வேண்டும்.பிறகு தண்ணீரில் சுமார் ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.பிறகு நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொண்டு அரிசியை மிக்ஸியில் ஓரளவு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு மண் சட்டையில் ஒரு கப் தண்ணீர் விட்டு அதனுடன் ஊற வைத்த நீரையும் உடைத்த அரிசியையும் சேர்த்து வேக வைக்க வேண்டும்.பிறகு அதனை அடிக்காத பாரு கரண்டியை வைத்து கிளற வேண்டும் நன்கு வந்த பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.பிறகு நன்கு கலந்து விட்டு சுகைக்கு ஏற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
கருப்பு கவுனி அரிசி பயன்கள்
உலகில் வாழும் மக்கள் அனைவரும் உணவு பொருளாக அரிசியை பயன்படுத்துகின்றன.அரிசி பல வகைகள் இருக்கின்றது.கருப்பு கவுனி அரிசி தினமும் சாப்பிடலாமா என்று சிலர் நினைப்பார்கள் ஆனால் கருப்பு கவுனி அரிசி மிகவும் ஆரோக்கியமான அரிசியாக இருக்கின்றது.ஆரோக்கியமான அரிசிகளின் வரிசையில் கருப்பு கவுனி அரிசி முதலிடத்தை பிடித்து உள்ளது.இந்த அரிசியின் பயன்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்
கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடென்ட் இருக்கின்றது.இதனால் நீரிழிவு புற்றுநோய் இதய நோய் மற்றும் பல நோய்கள் வராமல் தடுக்க இது உதவுகிறது.கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து வளமான அளவில் இருப்பதினால் உணவு சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் சீராக வைக்க உதவுகிறது.மலச்சிக்கல் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமைந்திருக்கிறது.
நார்ச்சத்து
கருப்பு கவுனி அரிசியில் அதிகம் நார்ச்சத்து இருக்கின்றது.100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 4.9 கிராம் அளவு நார்ச்சத்து இருக்கின்றது.மற்ற அரிசியில் உள்ள நார்ச்சத்தின் அளவு கருப்பு கவுனி அரிசியில் இரண்டு மடங்கு நார்ச்சத்து அதிகம் இருக்கின்றது.
இதயம்
கருப்பு கவுனி அரிசியை தினமும் சாப்பிட்டு வந்தாள் தம்பனியில் இருக்கும் கொழுப்பு படிதலை குறைக்கின்றது.மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கின்றது.ட்ரை கிளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.இதயம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட கருப்பு கவுனி அரிசி சாப்பிட வேண்டும்.
நீரிழிவு
கருப்பு கவுனி அரிசியில் அதிகம் நார்ச்சத்து இருப்பதனால் டைப் டு நீரிழிவு நோய் ஏற்படுவதை குறைக்கின்றது.நீரிழிவு நோய் இருப்பவர்கள் வெள்ளை அரிசியை சாப்பிடுவதற்கு பதிலாக கருப்பு கவுனி அரிசி தினமும் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் விரைவில் குணமாகும்.
நச்சுக்களை நீக்கும்
கருப்பு கவுனி அரிசி உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் தன்மை உடையது.கருப்பு கவுனி அரிசியை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகளை நீக்கவும் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவி செய்கிறது.எனவே கருப்பு கவுனி அரிசி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.