கனவில் கருப்பு பாம்பு வந்தால் என்ன பலன்
வணக்கம் நண்பர்களே.!! நாம் தூங்கும் போது கனவு வருவது என்பது வழக்கமான ஒன்று அந்த கனவில் பெரிய பாம்பு,கருநாகம்,நல்ல பாம்பு போன்ற பாம்புகள் நம்மளை துரத்துவது கடிப்பது அல்லது குறுக்கே செல்வது போல் கனவில் வந்தால் என்ன பலன் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
கனவில் கருப்பு பாம்பு வந்தால் என்ன பலன்
கருப்பு நிற பாம்பு கனவில் வந்தால் நிம்மதி இல்லாமல் உணர்ச்சிவசப்பட்டு தவறான காரியங்களை செய்யப் போகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் தெரியாத நபரை நம்பி அவரிடமிருந்து ஏமாற போகிறீர்கள் என்று அர்த்தம்.
பிறர் உங்களை வெறுப்பேத்தி உங்களை கோபம் அடைய செய்வார்கள் நீங்கள் கோபத்தில் தவறான செயல்களை செய்வீர்கள். வாழ்க்கைத் துணையால் உங்களுக்கு பண இழப்பீடு ஏற்படும்.எந்த ஒரு செயலை செய்தாலும் கவனமாக யோசித்து செய்ய வேண்டும்.
கருப்பு பாம்பை பார்த்து சிரிப்பது போல் கனவில் வந்தால்
கருப்பு பாம்பை பார்த்து சிரிப்பது போல் கனவில் வந்தால் உங்கள் எதிரிகளுக்கு எந்த ஒரு இரக்கம் காட்டாமல் அவர்களை தோற்கடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக எந்த ஒரு எதிரிகள் இருந்தாலும் அவர்களிடம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
கருப்பு பாம்பு மேல் ஏறுவது போல் கனவில் வந்தால்
கருப்பு பாம்பு மேல் ஏறுவது போல் கனவில் வந்தால் உங்களுக்கு நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து ஏதோ ஒரு ஆபத்து வரப்போகிறது என்று அர்த்தம் அதனால் உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாக பேச வேண்டும்.
கருப்பு பாம்பு துரத்துவது போல் கனவில் வந்தால்
கருப்பு பாம்பு துரத்துவது போல் கனவில் வந்தால் நீங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்து வைத்திருப்பீர்கள் அது பிறருக்குத் தெரிந்து விடுமோ என்று பயந்து கொண்டே இருப்பீர்கள்.
கருப்பு பாம்பு கடிப்பது போல் கனவில் வந்தால்
கருப்பு பாம்பு கடிப்பது போல் கனவில் வந்தால் வண்டியில் வெளியில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். உடலில் காயங்கள் ஏதேனும் ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கருப்பு பாம்பை பார்த்து அழுவது போல் கனவில் வந்தால்
கருப்பு பாம்பை பார்த்து அழுவது போல் கனவில் வந்தால் உங்களுக்கு இதுவரை இருந்த வாழ்க்கை சூழ்நிலையில் இருந்து உங்கள் வாழ்க்கை மாறுபடும். அது நல்லதாக கூட மாறலாம் கெட்டதா கூட மாறலாம் அதனால் எந்த ஒரு செயல் செய்தாலும் அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நிறைய கருப்பு பாம்பு கனவில் வந்தால்
நிறைய கருப்பு பாம்பு கனவில் வந்தால் உடல்நல குறைவு ஏற்படலாம். விரைவு மருத்துவ செலவுகள் ஏற்படும் அதனால் மிகவும் கவனமாக இருக்கவும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணங்களை கொஞ்சம் தள்ளிப் போடுவது மிகவும் நல்லது.
கருப்பு பாம்பு பயந்து ஓடுவது போல் கனவில் வந்தால்
கருப்பு பாம்பு பயந்து ஓடுவது போல் கனவில் வந்தால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் அந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து விடுவீர்கள்.தொழிலில் முன்னேற்றம் அடைந்து செல்வங்கள் உங்களைத் தேடி வரும்.
Read Also:
பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன்