கறிவேப்பிலை பயன்கள் | Karuveppilai Benefits in Tamil
கறிவேப்பிலை பயன்கள்
கறிவேப்பிலை உணவில் நறுமணத்துக்காக சேர்க்கப்படும் நாம் சாப்பிடும் போது தூக்கி எறிபவர்கள் அதிகம் கருவேப்பிலையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது அதனால் கருவேப்பிலையை தூக்கி எறியாமல் முழு மனதுடன் சாப்பிட வேண்டும் கறிவேப்பிலையில் விட்டமின்கள் கால்சியம் இரும்புச்சத்து பொட்டாசியம் மெக்னீசியம் புரதம் அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
கறிவேப்பிலையை பச்சையாகவோ சாறுகளாகவோ நம் உட்கொண்டு வந்தால் நம் உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது கறிவேப்பிலையில் உள்ள புரதம் விட்டமின் ஈ போன்ற சத்துக்கள் தலை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது சிறு வயதில் இருந்து கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் இருக்கும்.
கறிவேப்பிலை நன்மைகள்
நம் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் ரத்த சிவப்புகளில் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையை நீக்கும் கருவேப்பிலை சாப்பிடுவதால் பித்தம் குமட்டல் உடல் சூடு போன்றவை குறைக்கும் தன்மை உள்ளது நாம் கருவேப்பிலையே உணவாக எடுத்துக் கொண்டால் பித்த நோய்கள் தீரும்.
செரிமான பிரச்சனைகள் வராமல் இருக்கும் கர்ப்ப காலத்தில் பெண்கள் கருவேப்பிலை சாப்பிட்டு வந்தால் கருவின் மூளை வளர்ச்சி எலும்பு மண்டலம் ஆரோக்கியமாக வளரும் கருவேப்பிலியில் விட்டமின் ஏ அதிகம் உள்ளதால் தினமும் சாப்பிடும் பொழுது கண் மற்றும் நரம்புகளை வலுப்படுத்தி கண் பார்வையை இன்னும் தெளிவாக்கிறது.
கறிவேப்பிலை பொடி பயன்கள்
கருவேப்பிலையில் துவர்ப்பு சுவை அதிகம் உள்ளது மற்றும் அதனுடன் கசப்பு சுவை உள்ளது அதனால் கறிவேப்பிலை பொடி ஒரு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும் அதனுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டுகளை தினமும் கலந்து இரு வேலை உண்டு வந்தால் நீர் கோவை பெண்களின் சூதக வாய்ப்பு போன்றவை ஆகலும் கறிவேப்பிலை பொடியை தேனுடன் கலந்தும் சாப்பிடலாம்.
கருவேப்பிலை பொடி சாம்பார் கூட்டு பொரியல் ரசம் என்று அனைத்து வகை உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளலாம் இதனால் உணவு நன்றாக செரிமானம் ஆகும் வாந்தி மலச்சிக்கல் அஜீரணம் நாவில் சுவை குறைவு போன்றவை நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும்
கறிவேப்பிலை முடி வளர
கருவேப்பிலை கறிவேப்பிலை முடி உதிர்வதை குறைக்கவும் நரைமுடி ஏற்படுவதை தடுக்கவும் தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்தும் உதவுகிறது ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும் அதில் கருவேப்பிலை போட்டு லேசான சூட்டில் கொதிக்க விடவும் கருவேப்பிலை நிறம் கருமையாக மாறும் வரைக்கும் அதை கொதிக்க விடவும் நன்றாக கொதித்த பிறகு அதை எடுத்து நன்கு ஆற வைக்கவும் அதன் பிறகு அந்த எண்ணெயை தலைமுடிக்கும் உச்சந்தலைக்கும் லேசாக மசாஜ் செய்வது போல் தடவ வேண்டும் அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து தலை குளித்து வந்தால் முடி அடர்த்தியாகவும் முடி உதிர்வையும் தடுக்கும் கருவேப்பிலை எண்ணையை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
கறிவேப்பிலை தீமைகள்
கருவேப்பிலை பொதுவாக பாதுகாப்பானது தான் ஆனால் நம் அதை அதிக அளவில் உட்கொள்ளும் போது வயிற்று வலி மற்றும் அமில தன்மை போன்ற சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு அதனால் நம் கறிவேப்பிலை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது