கற்றாழை பயன்கள் மற்றும் தீமைகள்
கற்றாழை பயன்கள் | Katralai Payangal
கற்றாழையில் சோற்றுக்கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பெய்கற்றாழை கருங் கற்றாழை செங்காற்றாலை இரயில்கற்றாழை என பல வகைகள் உள்ளன சோற்றுக்கற்றாழை இலைகளில் கூல் மத்தியில் இருந்து பெறப்படும் திரவ பானத்தில் கால்சியம் குளோரின் சோடியம் பொட்டாசியம் வைட்டமின் ஏ மாங்கனிசு மற்றும் யூரிக் அமிலம் போன்ற சத்துக்கள் உள்ளன சோற்றுக்கற்றாழை சாப்பிட்டு வந்தால் ஏராளமான பயன்கள் உள்ளது.
கற்றாழை தினமும் சாப்பிடலாமா
சோற்றுக்கற்றாழை மேற்பகுதியை நீக்கிவிட்டு உள்ளே உள்ள ஜெல் போன்ற அமைப்பு தான் சாப்பிட வேண்டும் சாப்பிடுவதற்கு முன் இந்த ஜெல் பகுதியை தனியாகப் பிரித்து அதை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும் அதன் பிறகு சோற்றுக்கற்றாழை ஜெல்லை சாப்பிடலாம் சோற்றுக்கற்றாழை செரிமான அமைப்பு சுத்தம் செய்ய உதவுகிறது இது குடல் இயக்கத்திற்கு உதவ சிறந்த மலமிளக்கியாகவும் செயல்பட்டு மலச்சிக்கலை தடுக்கிறது கற்றாழை சாறு வெறும் வயிற்றில் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது கற்றாழை சாறு குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது இதனால் சோற்றுக்களை சாப்பிடுவது நல்லது அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
கற்றாழை முடி வளர
கற்றாழை உங்கள் முடிக்கு பல அதிசயங்கள் செய்யக்கூடியது இது உங்கள் முடியை ஊட்டமளிக்கும் முடி கவசத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல் கற்றாழை பயன்படுத்தி ஒரு கரைசலை உருவாக்கலாம் அதற்கு ஒரு கப் தண்ணீரில் ரெண்டு ஸ்பூன்கற்றாழை பசை மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும் ஷாம்பு ரெடி பண்ண பிறகு உங்கள் தலைமுடிக்கு தைக்கவும் அதன் பிறகு பத்து நிமிடங்கள் விட்டு விட்டு அதன் பிறகு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
இப்படி குளித்து வந்தால் உங்கள் தலையில் உள்ள பொடுகு எண்ணெய் பசை போன்றவை நீங்கும் இது வாரம் ஒரு முறை தேய்த்து குளித்து வர வேண்டும் அல்லது மாதம் இரண்டு முறை குளித்து வர வேண்டும் இப்படி குளித்து வந்தால் உங்களுடைய முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
கற்றாழை அழகு குறிப்புகள்
கற்றாழை சாறு முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள சுருக்கம் மற்றும் வயதாகிய தோற்றம் வராமல் தடுக்கும் முகத்தில் கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் போன்ற சரும பாதிப்புகள் இருந்தால் சிறிது கற்றாழைச்சாரை தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும் சோற்றுக்கற்றாழை சாறை முகத்தில்தடவினால் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும் சரும திசுக்களை புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும்.
கற்றாழை தீமைகள்
சோற்றுக்கற்றாழையை 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டு தாய்மார்கள் கற்றாழையை சாப்பிடுவது நல்லதல்ல மருந்துகளை சாப்பிடுபவர்கள் சோற்றுக்கற்றாழையை எடுத்துக் கொள்ளக் கூடாது ஏதேனும் மருந்துகள் உட்கொள்பவர்கள் மருத்துவர் ஆலோசனையே அணுக வேண்டும் அதிக அளவு அல்லது தொடர்ந்து சோற்றுக்கற்றாழையை எடுத்துக் கொண்டால் குறைந்த பொட்டாசியம் வயிற்றுப்போக்கு தாசி பலவீனம் வயிற்று வலி சிறுநீரகப் பிரச்சனைகள் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.