கனவில் கட்டில் வந்தால் என்ன பலன் | Kattil Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.
கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.படுத்து உறங்குவதற்கு பயன்படுத்தும் கட்டில் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கனவில் கட்டில் வந்தால் என்ன பலன்
கட்டில் கனவில் வந்தால் கனவு காண்பதற்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும் அதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
அழகான கட்டில் கனவில் வந்தால்
அழகான கட்டில் கனவில் வந்தால் கனவு காண்பவர் திருமணம் ஆனவராக இருந்தால் கூடிய விரைவில் குழந்தை வரம் கிடைப்பதையும் திருமணம் ஆகாதவராக இருந்தால் கூடிய விரைவில் நல்ல வாழ்க்கை துணை கிடைப்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது.
வெறும் கட்டில் கனவில் வந்தால்
வெறும் கட்டில் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும் மோசமான நிகழ்வுகள் அதாவது உங்களுக்கு எதிராக இருப்பார்கள் இடம் இருந்து வரும் பிரச்சனைகளை பற்றியும் அவர்களிடம் கவனமாக இருப்பதற்கும் இந்த கனவு அறிவுருத்துகிறது.
கட்டில் வாங்குவது போல் கனவில் வந்தால்
கட்டில் வாங்குவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் நீங்களே சரி செய்து விடுவீர்கள் என்று இந்த கனவு உணர்த்துகிறது.வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் சமாளித்து வாழ்க்கையில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பீர்கள்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன் |
தண்ணீரில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் |
கடல் கனவில் வந்தால் என்ன பலன் |
கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் |