காயிதே மில்லத் வரலாறு | Kayithe Millath History In Tamil
இந்தியாவில் புகழ்பெற்ற தமிழர்கள் என்ற பட்டியலில் ராஜாஜி காமராஜ் ஆகியோர் பெயர்களை சேர்ப்பார்கள் ஆனால் காயிதே மில்லத் முகமது இஸ்லாமிய என்ற பெயரை சேர்க்க மறந்து விடுவார்கள்.இவர் அந்த பட்டியலில் இடம் பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டவர்.காயிதே மில்லத் என்பவர் கண்ணியமானவர்,எளிமையானவர்,தேசபக்தி நிறைந்து உள்ளவர் என்று பல அடையாளங்கள் கொண்டவர்.
காயிதே மில்லத் என்பவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்.இவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படுபவர்.இவர் முகமது இஸ்லாமிய சாகிபு என்பவர் இந்தியாவின் முஸ்லிம் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.காயிதே மில்லத் என்ற அரபு சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்றும் போற்றப்படுகின்றார்.மேலும் காயிதே மில்லத் வரலாற்று பற்றி விரிவாக பார்ப்போம்.
காயிதே மில்லத் ஆசிரியர் குறிப்பு
இயற்பெயர் | முஹம்மது இஸ்மாயில் சாகிபு |
பிறந்தநாள் | 5 – 6 – 1896 – 5 – 4 – 1972 |
பிறந்த ஊர் | திருநெல்வேலி மாவட்டம் ஊராகிய பேட்டையில் |
தந்தை பெயர் | மியாகான் ராவுத்தர் |
மனைவி | சமால் கமீதாபீவி |
மகன் | சமால் முகமது மியாகான் |
மேலும் இவருடைய தந்தை அரசு குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும் முஸ்லிம் மத தலைவராகவும் இருந்தவர்.இஸ்மாயில் சாகிப் சிறுவயதில் தந்தையை இழந்தவர்.இவர் தாய் அரபு மொழியும்,மத நூலும் கற்றுக்கொடுத்தார்.
இஸ்மாயில் சாகிப் சிறுவயதாக இருந்தபோது தந்தையை இழந்து விட்டார்.அதற்கு மேல் இவருடைய தாய் அரபு மொழியும் மத நூல்களும் கற்றுக் கொடுத்தார்.பிறகு இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டார்.
காந்தி அழைப்பு விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று தன்னுடைய பிஏ பொது தேர்வை எழுதாமல் புறக்கணித்து விட்டார்.அதன் பிறகு முஸ்லிம் லீக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.பிறகு இவர் 1945 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
காயிதே மில்லத் சாதனைகள்
- 1948 ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
- 1946 ஆம் ஆண்டு முதல் 52 ஆண்டுகள் வரை வருகை தந்து வாகன சட்டசபை உறுப்பினராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து உள்ளார்.
- 1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆண்டுகள் வர டெல்லி மேல் சபை உறுப்பினராகவும் பணியில் இருந்தார்.
- பிறகு 1962 1967 1971 தேர்தல்களில் கேரளா மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றார்.
- பின் 1967-ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் கட்சி ஆட்சியை கைப்பற்றி முக்கிய பங்கு வகித்தது.
இதுவே இவருடைய சாதனையாக பெரிதும் போற்றப்பட்டு வருகின்றது.மேலும் இவர் அனைத்து கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக இருந்து வந்தார்.மேலும் இவர் அனைவரிடத்திலும் நட்புறவு கொண்டிருந்தார்.
காயிதே மில்லத் வரலாறு
காயிதே மில்லத் முகமது அலி ஜின்னாவின் தலைமையில் முஸ்லிம் லீக் இயங்கிக் கொண்டிருந்த போது அதனுடைய முக்கிய தலைவராக இருந்தார்.இந்திய பிரிவினைக்கு பிறகு முஸ்லிம் லீக்கை பிரித்து விடுவது என்று முடிவு செய்தனர்.அப்பொழுது இந்திய பகுதி முஸ்லிம் லீக் இன் பொறுப்பாளராக காயிதே மில்லத் பணி நியமனம் செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் பகுதி முஸ்லிம் லீக் பொறுப்பாளராக பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி பணி நியமன செய்யப்பட்டார்.அதன் பிறகு இந்திய பகுதி முஸ்லிம் லீக் இன் பெயர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இதன் தலைவராக காயிதே மில்லத் அவர்களை தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிட்ட வேண்டும் என்று நேரு அறிவித்தார்.அப்பொழுது காங்கிரசின் சின்னத்தில் நின்றால் வெற்றி சார்பு நிச்சயம் ஆனாலும் முஸ்லிம் லீக் சுயமரியாதையுடன் இயங்கி தனித்தன்மை காக்கும் என்று கூறிவிட்டார் காயிதே மில்லத்.
முஸ்லிம் லீக் இன் அகில இந்திய தலைவர் பொறுப்பில் இருந்தாலும் தமிழ்நாட்டு உரிமைகள் விஷயத்தில் நேர்மையுடனும் துணிச்சல் உடனும் தேர்தல் அரசியல் நோக்கங்களை புறக்கணிக்கவும் இயங்கி வந்தார் காயிதே மில்லத்.
காயிதே மில்லத் இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த பொழுது இந்திக்கு எதிராகவும் தமிழுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்தார்.ஒரு உண்மையை இந்த சபை முன் துணிவோடு கூற விரும்புகின்றேன்.
இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானது ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருந்து வருவதும் தமிழ் தான்.உயர்தரமான இலக்கிய வளங்களும் நயங்களும் நிறைந்த மொழி தமிழ் இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று காயிதே மில்லத் கூறினார்.
காயிதே மில்லத் அவர்கள் நான் தமிழ் மொழியை நேசிக்கிறேன்.தமிழ் மொழி பற்றி நான் பெருமை அடைகின்றேன்.பழமையான தமிழ் மொழியை தான் இந்த நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டும் என்றால் இந்தியாவின் தேசிய மொழியாக தமிழை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று காயிதே மில்லத் கூறினார்.
காயிதே மில்லத் 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு செய்த பொழுது அதனை எதிர்த்து அரசியல் தலைவர்களில் ஒருவர் இருவரும் ஆவார்.நம் அருமை வாய்ந்த தாயகத்தின் மீது பாகிஸ்தான் நடத்தும் ஆக்கிரமிப்பு நான் பலத்த கண்டனம் தெரிவிக்கிறேன் ஐயந்திரிபற்ற என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு மட்டும் உள்ள அனைத்து மக்களுக்கும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பை இது இந்திய அரசாங்கத்தின் பின்னாலும் பிரதமரின் பின்னாலும் ஒரு முகமாகவும் உறுதியாகவும் நிற்கிறார்கள் என்று காயிதே மில்லத் கூறினார்.