குரங்கு கனவில் வந்தால் என்ன பலன் | Kuarangu kanavil vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
பொதுவாக காட்டில் இருக்கும் கோயிலுக்கு அல்லது மலையில் இருக்கும் கோவிலுக்கு நம் செல்லும்பொழுது குரங்குகளை பார்ப்போம். அந்த குரங்குகள் பல சேட்டைகள் நம்மிடம் செய்யும் அப்படிப்பட்ட குரங்கு கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
குரங்கு கனவில் வந்தால் என்ன பலன்
குரங்கு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு பிறர் வஞ்சகம் செய்ய இருப்பதை இந்த கனவு உணர்த்துகிறது. எந்த ஒரு செயலையும் விளையாட்டுத்தனமாக செய்வீர்கள். எந்த ஒரு காரியங்கள் செய்தாலும் குழந்தைத்தனமாகவே செய்வீர்கள்.
வளர்ப்பு குரங்கு கனவில் வந்தால்
வளர்ப்பு குரங்கு கனவில் வந்தால் கனவு காண்பவரின் அறிவு மற்றும் திறமையின் மூலம் வாழ்வில் பல மடங்கு உயர்ந்து. பணம் புகழ் என்று சந்தோசமாக இருப்பார்.
யானை கனவில் வந்தால் என்ன பலன் |
குட்டி குரங்கு கனவில் வந்தால்
குட்டி குரங்கு கனவில் வந்தால் கனவு காண்பவர் தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் அவர்கள் உங்களை நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள்.
குரங்கு கடிப்பது போல் கனவில் வந்தால்
குரங்கு கடிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் தன் வாழ்வில் புத்தி இல்லாத எந்த ஒரு ஒழுங்கு முறை இல்லாத வரை சந்திப்பார் என்று இந்த கனவு உணர்த்துகிறது.
குரங்கை பிடிப்பது போல் கனவில் வந்தால்
குரங்கை பிடிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு புதிதாக தன்னை நேசிக்கும் ஒரு உறவு கிடைப்பதை இந்த கனவு உணர்த்துகிறது.
காலில் குரங்கு கடிப்பது போல் கனவில் வந்தால்
காலில் குரங்கு கடிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் ஒரு புதிய செயலுக்காக வெளியூருக்கு சென்று இருப்பார்.அந்த செயலில் தோல்வி பெற்று மீண்டும் திரும்புவார் என்று இந்த கனவு உணர்த்துகிறது.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
காகம் கனவில் வந்தால் என்ன பலன் |
காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் |
ஆமை கனவில் வந்தால் என்ன பலன் |
புலி கனவில் வந்தால் என்ன பலன் |