குப்பைமேனி இலை அழகு குறிப்புகள் | Kuppaimeni For Face
பொதுவாக பெண்கள் அனைவருமே முகத்தில் ஏதேனும் கரும் புள்ளி இருந்தால் அதை உடனே சரி செய்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பார்கள் ஏனென்றால் பெண்களுக்கு முகம் தான் மிகவும் அழகு.
சில பெண்களுக்கு முகத்தில் தோல் நோய் மற்றும் கரும்புள்ளிகள் அலர்ஜி முகத்தில் இருக்கும் அரிப்புகள் இருக்கும் அதை நீங்கள் சரி செய்வதற்கு உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய குப்பைமேனி செடியை வைத்து சரி செய்து கொள்ள முடியும் இதைப்பற்றி கீழே தெளிவாக கூறியுள்ளோம்.
Kuppaimeni Benefits in Tamil
இந்த குப்பைமேனி முகத்திற்கு மட்டுமல்லாமல் அதிக மருத்துவ குணம் உள்ள ஒரு செடியாகும் இது அதிகமாக உங்க வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கூடிய குப்பைகளில் அதிகமாக இருக்கும்.
இந்த இலையை பறித்து நீங்கள் பொடியாக மாற்றி தினந்தோறும் குளிக்கும் போது முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் உங்களுக்கு கரும்புள்ளிகள் முகத்தில் இருக்கும் சருமம் போன்ற அனைத்தும் நீங்கிவிடும் உங்கள் முகமும் பளபளப்பாக வெள்ளையாக ஆகிவிடும்.
Kuppaimeni Uses in Tamil
குப்பைமேனி இலை பொடி தயாரிக்கும் முறை
உங்களுக்கு தேவையான அளவு குப்பைமேனி இலையை பறித்துக் கொள்ளுங்கள்
அதில் இருக்கும் பூச்சிகளை அகற்றி விடுங்கள் அதன் பிறகு வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்
அந்த இலை காய்ந்து விட்ட பிறகு உங்கள் மிக்ஸி ஜாரில் உள்ளே போட்டு அரைத்து பொடியாக மாற்றி விடுங்கள்
சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு இன்னும் சில பலன்கள் கிடைக்கும்
அரைத்த பிறகு ஒரு டப்பாவில் இதை கொட்டி வைத்து தினந்தோறும் நீங்கள் குளிக்கும் போது முகத்திற்கு இதை பயன்படுத்தி வந்தால் முகத்தில் இருக்கக்கூடிய பல பிரச்சனைகளுக்கு இது தீர்வு கொடுக்கும்
இதை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களுக்கு முகத்தில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் அரிப்பு அலர்ஜி போன்ற வித்தியாசங்கள் தெரிந்தால் இதை நீங்கள் பயன்படுத்தக் கூடாது ஏனென்றால் உங்கள் முகத்திற்கு இந்த இலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம் ஆகும்