விடுப்பு விண்ணப்பம் கடிதம் | Leave letter in Tamil
வணக்கம் நண்பர்களே.!!பள்ளி படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் விடுப்பு எடுப்பதற்கு விடுப்பு விண்ணப்பம் எழுத வேண்டும் ஆனால் பெரும்பாலானவருக்கு அது எப்படி எழுதுவது என்று தெரியாது விடுமுறைக்கான காரணம் தெரியும் ஆனால் அது பிழை இல்லாமல் மற்றும் சரியான முறையில் எழுதத் தெரியாது.
விடுமுறை விண்ணப்பம் சரியான முறையில் எழுதுவது எப்படி என்று நாங்கள் இந்த பதிவில் சொல்லி இருக்கிறோம் இதைப் பார்த்து உங்களின் விடுமுறை விண்ணப்பத்தை தயார் செய்து கொள்ளுங்கள்.
Leave Letter In Tamil For Fever
விடுப்பு விண்ணப்பம்
அனுப்புநர் :
மாணவனின் பெயர்,
படிக்கும் வகுப்பு,
பள்ளியின் பெயர்,
ஊர்.
பெறுநர் :
வகுப்பு ஆசிரியர்/ஆசிரியை அவர்கள்,
படிக்கும் வகுப்பு,
பள்ளியின் பெயர்,
ஊர்.
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,
பொருள்: விடுப்பு வேண்டி விண்ணப்பம்
வணக்கம் ஐயா/அம்மா.நான் __________ பள்ளியில் ________வகுப்பில் படித்து வருகிறேன்.எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் பள்ளிக்கு வர இயலவில்லை.எனவே தயவு கூர்ந்து 16-08-2023 முதல் 17-08-2023 ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு உண்மையுள்ள
மாணவன்/மாணவி
தேதி:
இடம்:
பின்குறிப்பு:
1.மேலே கொடுக்கப்பட்டிருக்கும் விடுமுறை விண்ணப்பத்தில் அனுப்புனரில் விடுமுறை விண்ணப்பம் எழுதும் மாணவனின் பெயர் மற்றும் அவரின் பள்ளியின் பெயர் பள்ளியின் ஊர் போன்றவை சரியான முறையில் கொடுக்கவும்.
2.பெறுநர் நீங்கள் எழுதும் மாணவனின் வகுப்பு ஆசிரியர் அல்லது ஆசிரியரின் பெயர் மற்றும் அனுப்புனரில் எழுதியதை போல படிக்கும் வகுப்பு பள்ளியின் பெயர் ஊர் சரியான முறையில் கொடுக்கவும்.
3.விண்ணப்பத்தில் இடைப்பட்ட பகுதியை சரியான முறையில் நிரப்பவும்
4.நீங்கள் எந்த காரணத்திற்காக விடுமுறை எடுக்கப் போகிறீர்களோ அந்த காரணத்தை சரியான முறையில் கொடுக்கவும்.
5.எத்தனை நாட்கள் விடுமுறை எடுக்கப் போகிறீர்களோ அந்த நாட்களை கொடுத்து மற்றும் எழுத்துக்களாலும் எழுத வேண்டும்.
6.அதன் பிறகு கீழே எழுதும் மாணவனின் கையொப்பமிட்டு அதன் கீழே தேதி மற்றும் இடத்தை சரியான முறையில் கொடுக்கவும்.
7.புல் ஸ்டாப் மற்றும் கமா குறி சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
இதையும் படிக்கலாமே..
பாரதிதாசன் வரலாறு | Bharathidasan History In Tamil |
முத்தரையர் வரலாறு | Mutharaiyar History In Tamil |
கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு | Kannadasan Life History In Tamil |
எம்ஜிஆர் வரலாறு | MGR History In Tamil |