Long Distance Relationship Quotes Tamil | தொலைதூர கவிதைகள்
வணக்கம் நண்பர்களே.!! மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரும் மீது அன்பு இருக்கும் அப்படி அன்பு வைத்திருப்பார்கள் அனைவரும் பக்கத்தில் இருக்க மாட்டார்கள் அதிக அளவு அன்பு வைத்திருப்பவர்கள் தொலைதூரத்தில் தான் இருப்பார்கள்.
அது நண்பர்களாக இருந்தாலும் சரி காதலராக இருந்தாலும் சரி அவர்களின் நினைவோடு நீங்கள் இருக்கிறீர்கள் என்று அவர்களுக்கு தெரிவிப்பதற்காக சில கவிதைகளை புகைப்படத்துடன் இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து அவர்களுக்கு நீங்கள் இன்னும் அவர்களை மறக்கவில்லை என்பதை தெரிவிக்கும் விதமாக இதை அனுப்புங்கள்.
“நேரில் பார்க்க ஆசை, பார்க்க முடியவில்லையே.. கண்கள் இரண்டும் உன்னையே தேடுகின்றன”
“இரசிப்பதற்கு ஆயிரம் இருந்தும், நான் இரசிக்கக் காத்திருப்பது உன்னை மட்டும்”
“எத்தனை உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும்
என் உள்ளம் தேடும் ஒரே உறவு நீ மட்டும் தான்”
“இதயங்கள் அருகில் இருக்கும் பொழுது,
இருக்கும் இடங்கள் ஒன்றும் தூரமில்லை”
“உறங்கினால் கனவில் வருகிறாய், உறங்காவிடில் நினைவில் வதைக்கிறாய்! காத்திருக்கிறேன் உன்னை விரைவில் அருகில் காண”
“எங்கு போனாலும் என் உலகம் என்றும் நீ மட்டுமே! துணை இன்றி வீணை வாழாது”
“தூரம் பெரிதாய்த் தெரியவில்லை அவள் அன்பின் முன்பு”
“தொங்கிக் கொண்டிருக்கும் உடலை விட்டு, தொலை தூரத்தில் உயிர்! வெளிநாட்டில் நீ”
“முடியா பயணமும், விடியா இரவும், அழகான அக்கணங்களை அனுபவிக்க ஆசை அவனோடு மட்டும்.”
“தொலைவால் தூரத்தில் இருந்தாலும், என் நினைவால் நெஞ்சோரத்தில் நீ”
இதையும் படிக்கலாமே..
Thanimai Quotes | தனிமை கவிதை |
Miss You Long Distance Relationship Quotes In Tamil |
Success Motivational Quotes In Tamil |
காதல் கவிதைகள் |