maca Root in Tamil – முழு விபரம்
வணக்கம் நண்பர்களே.!! இன்றைய பதிவில் மக்கா வேரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் மக்கா வேரின் பயன்கள் அதை எப்படி உண்பது என்ற முழு விவரங்களை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
maca Root in Tamil
மக்கா வேர் இயற்கை வயாகரா என்றும் அழைக்கப்படுகிறது. மக்கா வேரை கிராமப் பகுதியில் உள்ள பெருதேய கிழங்கு என்றும் அழைப்பார்கள்.மக்கா வேர் பெரும்பாலும் மலைப்பகுதியில் தான் கிடைக்கும்.மக்கா வேரில் இரும்பு சத்து,கால்சியம் இந்த மாதிரியான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.தினமும் உண்ணக்கூடிய உணவில் மக்கா வேரை சேர்ப்பதன் மூலம் உங்கள் விட்டமின் அதிகரிக்கும்.மக்கா வேர் முள்ளங்கியுடன் நேரடி தொடர்பில் இருக்கிறது.

மக்கா வேரின் பயன்கள்
மக்கா வேர் மருத்துவ ரீதியாக தூளாக பயன்படுகிறது. மக்கா வேர் தாம்பத்திய உறவுக்கு பயன்படுத்தப்படுகிறது. மக்கா வேர் உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டால் ஆண் பெண் இருவருக்கும் தாம்பத்திய ஆசைகளையும் செயல் திறனையும் அதிகரிக்கிறது.
மக்கா வேர் மூலம் ஆண்களுக்கு என்ன பயன்கள்
மக்க வேரை உண்ணும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆண்களின் விந்து அணுக்களை அதிகரிக்கிறது. வெற்றிகரமான இனப்பெருக்க செயல்பாட்டுக்கு வழிவக்குது.மக்கா வேர் ஆண்களின் விந்து அணுக்களை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இயக்க வேகத்தையும் அதிகரிக்கிறது.மிகவும் வேகமாக குழந்தை பிறப்பதற்கும் மக்கா வேர் உதவுகிறது.விளையாட்டு வீரர்கள் தங்களின் உடம்புகளை சரியாக பராமரிக்க மக்கா வேர் உதவுகிறது.

மக்கா வேர் மூலம் பெண்களுக்கு என்ன பயன்கள்
மக்கா வேரை பெண்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் கரு உருவாவதற்கு உதவுகிறது. ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிப்பதன் மூலம் ஆண் பெண் இருவருக்கும் கரு உருவாவதற்கு இது உதவுகிறது.பெண்களுக்கு சரியான காலத்தில் மாதவிடாய் வரவில்லை என்றால் மக்காவேரை சாப்பிட்டால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை இது சரி செய்யும்.
மக்கா வேர் மருத்துவ பயன்கள்
சாப்பிடும் உணவில் மக்காவை சேர்ப்பதன் மூலம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து எலும்புகளின் வலிமைகளையும் அதிகரிக்கும்.இதை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான நீடித்த எலும்பு வளத்தை கொடுக்கும்.மன அழுத்தத்தையும் குறைக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.மக்கா வேர் இயற்கை வைத்தியத்திற்கு பயன்படுகிறது.