Makkum Kuppai Makkatha Kuppai |மக்கும் குப்பை மக்கா குப்பை
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று பழமொழிக்கு ஏற்ப ஆரோக்கியமானவாழ்க்கைக்கு தொற்று நோய்கள் நம்மை தீண்டாமல் இருக்க சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.சுகாதாரம் என்பது நமது சுற்றி இருக்கும் அனைத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய ஒன்றாகும்.இந்த உலகம் எதிர்கொண்டுள்ள மிக மோசமான சவால்களில் ஒன்று சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் குப்பைகளே ஆகும்.இந்த வகையான குப்பைகளில் பிரதானமாக இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது.அது மக்கும் குப்பை,மக்காத குப்பை ஆகும்.மேலும் இந்த இரண்டு வகையான குப்பைகள் என்ன என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
Makkum Kuppai
இயற்கையில் இருந்து எந்த பொருள் வந்தாலும் அதனை மீண்டும் இயற்கையோடு கொண்டு செல்வதை மக்கும் குப்பை என்று கூறுவார்கள்.நாம் அன்றாட பயன்படுத்தும் காய்கறிகள்,பழங்கள்,உணவு பொருட்களின் கழிவுகள்,இலைகள்,தேங்காய் நார்,சிரட்டை ஓடுகள் போன்றவற்றை இந்த மக்கும் குப்பைகளில் கூறுவார்கள்.எவைகள் எல்லாம் மண்ணில் போட்டவுடன் மக்கி மண்ணாகி போகுமோ அவைகள் எல்லாம் மக்கும் குப்பைகள் ஆகும்.
இந்த வகையான குப்பைகளை நமது வீட்டிலே மக்க வைத்து வீட்டில் இருக்கும் செடிகளுக்கு இயற்கை உரமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.இதனை தனியாக பிரித்து கொடுப்பதன் மூலம் இருந்து இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகிறது.இந்த இயற்கை உரங்கள் இடுவதின் மூலம் பயிர்கள் நல்ல விளைச்சலை தரும்.இது நாட்டில் இருக்கும் இயற்கை விவசாயத்தை மேலும் அதிகப்படுத்த உதவியாக இருக்கிறது.அது மட்டும் இல்லாமல் இயற்கை உணவுகளால் நமது உடல் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
Makkatha Kuppai
நுண்ணுயிரிகளால் நீண்ட காலம் எடுத்து சிதைக்கக்கூடிய பொருட்கள் அனைத்துமே மக்காத குப்பைகள் என்று கூறுவார்கள்.நாம் அன்றாட பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஆல் ஆன பொருட்கள் தண்ணீர் பாட்டில்கள்,பாலித்தீன் பைகள்,அட்டைகள்,செராமிக்ஸ் பொருட்கள்,lஉலோக குப்பைகள்,பிளாஸ்டிக் கண்ணாடிகள் போன்றவற்றை மக்காத குப்பை பொருட்களில் சேர்க்கலாம்.
மக்காத குப்பைகளில் ஒரு பகுதி மறுசுழற்சி என்று கூறுவார்கள்.இது மீதமுள்ள மக்காத குப்பைகளை மறுபடியும் பயன்படுத்தப்படுகிறது.இது மனித இனத்துக்கு மட்டுமில்லாமல் விலங்குகள் தாவரங்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் இருக்கும் உயிர்களை பாதிக்க செய்கிறது.இந்த மக்காத குப்பைகளினால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. இவற்றினை இருப்பதினால் காற்று மாசு அடைவது மட்டுமில்லாமல் நுரையீரல் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.இதனை கடலில் கொட்டுவதன் மூலம் கடல் வாழ் உயிரினங்கள் அழிகின்றது.இதனால் இந்த குப்பைகளை மறுசுழற்சி செய்து விற்பனை செய்கின்றனர்.
பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்
மண் வளத்தை காப்போம்
மக்காத குப்பைகள் குறைத்தல்,மறுசுழற்சி,மறு பயன்பாடு
கழிவு பொருட்களை குறைவாக பயன்படுத்துவது குறைத்தல் ஆகும்.அதாவது குறைவான கழிவினை உருவாக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.ஒரு பொருளை மீண்டும் மீண்டும் ஒரே பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தக் கூடாது அதுவே மறு பயன்பாடாகும்.மறு பயன்பாட்டில் குறைந்த கழிவுகளை உருவாக்குவதின் மூலம் குப்பைகளை குவிப்பதை முழுவதும் தடுக்கலாம்.பயன்படுத்திய மின் தூக்கி எறியும் பொருள்களில் இருந்து புதிய பொருட்களை உருவாக்குவது மறுசுழற்சி எனப்படும் எடுத்துக்கொண்ட புதிய பொருள்களை உருவாக்க தேவைப்படுகிறது.இது வளங்களை சேமிக்கவும் உதவும்.
எனவே மக்கள் ஆகிய நாம் கழிவு மேலாண்மையில் பங்கு இருக்கின்றது.மக்கும் குப்பை,மக்காத குப்பை என்று சரியாக குப்பைகளை பிரித்து வேலையை நாம் எல்லோரும் சரி சமமாக செய்தால் மிகப்பெரிய மாற்றத்தை நமது நாட்டில் ஏற்படுத்த முடியும்.
இதையும் படிக்கலாமே..
ஐந்து எழுத்து தமிழ் சொற்கள் | 5 Letter Words in Tamil |
Bank Account Closing Letter in Tamil | வங்கி கணக்கு மூடல் |
கருப்பு உளுந்து பயன்கள் | Black Gram in Tamil |