மனித கழிவுகளை கனவில் கண்டால் என்ன பலன் | Malam Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!! இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் வரும் கனவுகளில் நல்லது நடப்பது போலும் இருக்கலாம் கெட்டது நடப்பது போல இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.மனித கழிவுகள் அதாவது மலம் வந்தால் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மலம் கழிப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்
மலம் கழிப்பது போல் கனவு வந்தால் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எதிர்பாராத பண வரவுகள் வரும். வாழ்வில் கடைசி காலத்தில் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.
மலம் கனவில் கண்டால் என்ன பலன்
மலம் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். நண்பர்கள்,உறவினர்கள் அல்லது மனதுக்குப் பிடித்தவர்கள் செய்த தவறை மன்னிக்கவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பீர்கள்.எதிர்பாராத பண வரவுகள் வரும்.
விலங்குகளின் மலம் கனவில் வந்தால்
விலங்குகளின் மலம் கனவில் வந்தால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் வேறு ஒருவர் ஒரு செயலை தவறாக செய்து முடித்து இருப்பார்கள் அதை நீங்கள் திரும்பவும் கஷ்டப்பட்டு சரியாக செய்து முடிப்பீர்கள். வேலையின் மூலம் வருமானம் உயரும்.
மலத்தை மிதிப்பது போல் கனவில் வந்தால்
மலத்தை மிதிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு இது ஒரு நல்ல கனவாக தொழிலில் நல்ல அதிர்ஷ்டம் எதிர்பாராத வித பணவரவுகளும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பளம் உயரும்.
மலத்தை தொடுவது போல் கனவில் வந்தால்
மலத்தை தொடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் எந்த ஒரு வேலை செய்தாலும் முழு திருப்தி இல்லாமல் செய்வார்கள். வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத வேலையை மேலதிகாரிகள் உங்களிடம் கொடுப்பார்கள்.
குழந்தை மலம் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
குழந்தையின் மலம் கனவில் வந்தால் கனவு காண்பவர்கள் செய்யும் வேலையை நேர்மையாக செய்வார்கள். மற்றவர்களுக்கு உதாரணமாக இருப்பார்கள். புதிய தொடக்கம் வாழ்வில் வரவிருக்கிறது.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
ஆடை இல்லாமல் கனவு வந்தால் என்ன பலன் |
கனவில் சில்லறை காசு வந்தால் என்ன பலன் |
சித்தர்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
நாய் கனவில் வந்தால் என்ன பலன் |