நாமக்கல் நாமகிரிப்பேட்டை அருகே சீராப்பள்ளி ஒடுவன் குறிச்சி என்ற கிராமம் ஒன்று உள்ளது. அங்கு மணி என்பவரும் மணிமுத்து என்பவரும் வசித்து வருகின்றனர்.மணியும் மணி முத்து என்பவரும் இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மணி தனது வீட்டின் முன்பு தனது வண்டியை நிறுத்தி இருந்தார். வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது நிறுத்தி இருந்த வண்டியை காணவில்லை அதிர்ச்சி அடைந்த மணி நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் மணிமுத்து தான் வண்டியை திருடி சென்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.மணிமுத்து மணியின் வண்டியை திருடி மெட்டாலா வண்டி ஸ்டாண்டில் நிறுத்தி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. வழக்கு பதிவு செய்து மணிமுத்துவை காவலர் கைது செய்தனர்.