Homeதமிழ்மணல்மேடு சங்கர் வரலாறு | Manalmedu Shankar History In Tamil

மணல்மேடு சங்கர் வரலாறு | Manalmedu Shankar History In Tamil

மணல்மேடு சங்கர் வரலாறு | Manalmedu Shankar

மணல்மேடு சங்கர் 

வணக்கம் நண்பர்களே.!! மணல்மேடு சங்கர் நாகப்பட்டினம்,புதுக்கோட்டை,திருச்சி  மாவட்டங்களில் யாரும் நெருங்க கூட முடியாத அளவிற்கு பிரபல ரவுடியாக இருந்தான்.போலீசார் பிடியில் சிக்கிய மணல்மேடு சங்கர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.ஆனால் போலீசார் சாலை விபத்தில் தான் மணல்மேடு சங்கர் இறந்ததாக கூறப்படுகின்றனர்.

- Advertisement -

மணல்மேடு சங்கர் கதை

வேதாரண்யம் அருகே உள்ள மணல்மேடு சேர்ந்த சங்கரின் மீது பல வழக்குகள் உள்ளது மணல்மேடு  பஞ்சாயத்து தலைவர் அஞ்சப்பா என்பவரை கொலை செய்த வழக்கும் கும்பகோணம் பந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த அருள் என்பவரை கொலை செய்த வழக்கும்.

போதை பொருள் கடத்தல் போதைப் பொருட்களை கடத்தி இலங்கை போன்ற பகுதிகளில் கடத்தி சென்ற வழக்கும் மணல்மேடு சங்கரின் மீது இருந்தது.திருச்சி,புதுக்கோட்டை,நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மணல்மேடு சங்கர் ரவுடி பட்டாளத்தை வைத்து அடிதடி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான்.மணல்மேடு சங்கரை போலீஸ் கைது செய்து அவனை மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

மதுரை சிறையில் இருந்து ஒவ்வொரு வழக்கு விசாரணைக்கும் மணல்மேடு சங்கரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இப்படி சிறையில் மணல்மேடு சங்கர் இருக்கும்போது தமிழ்நாட்டில் உள்ள ரவுடிகளை போலீசார் என்கவுண்டர் செய்து ரவுடிகளை ஒழித்து வந்தனர்.

இந்த தகவல் தெரிந்த மனமேடு சங்கர் பயந்து போய் இருந்தான் போலீசார் தன்னையும் என்கவுண்டர் செய்து கொள்ள போகிறார்கள்.என்று ஒவ்வொரு வழக்கும் போது நீதிமன்றத்திற்கு செல்லும் பொழுது நீதிபாதியிடம் முறையிட்டு வந்தான்.

- Advertisement -

மணல்மேடு சங்கர் வரலாறு | Manalmedu Shankar History In Tamil

சங்கரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி மணல்மேடு சங்கருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.அதன் பிறகு பந்தநல்லூர் அருள் கொலை வழக்கத்திற்காக கும்பகோணத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு மதுரையிலிருந்து மணல்மேடு சங்கர் போலீசாரின் பாதுகாப்பால் அழைத்துவரப்பட்டது.

- Advertisement -

வழக்கு முடிந்த இரவு 11 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகோட்டை வழியாக செல்லும் பொழுது புதுநகர் என்ற இடத்தில் முந்திரி கார்டு ஒன்று இருந்தது அங்கு சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்தது அப்பொழுது போலீஸ் இடம் இருந்து தப்பி செல்ல முயன்ற மனமேடு சங்கரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

ஆனால் வேன் கவிழ்ந்ததில் மணல்மேடு சங்கர் உட்பட போலீசுக்கும் பலத்த காயம்ஏற்பட்டதாகவும்  அதில் மணமேடு சங்கர் மட்டும் இறந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு மணல்மேடு சங்கரின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரின் உடலை யாரும் பார்க்க போலீசார் அனுமதிக்கப்படவில்லை இதனால் மணல்மேடு சங்கர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது சாலை விபத்தில் இறந்தாரா என்று இதுவரை தெரியவில்லை. இதைக் குறித்தும் போலீஸ் அதிகாரிகளும் எந்த ஒரு தகவலும் கொடுக்கவில்லை.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR