மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Mariyamman kanavil vanthal
வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அவ்வாறு நாம் தூங்கும் போது நம் கனவில் சாமி கனவுகள் வந்தால் நமக்கு நன்மைகள் நடக்குமா தீமைகள் நடக்குமா என்று நம் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் அவ்வாறு நம் கனவில் சாமி வந்தால் நடக்கும் நன்மை தீமைகளை பற்றி கீழே விவரமாக பார்க்கலாம்.
மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன்
மாரியம்மன் உங்கள் கனவில் வந்தால் நீங்கள் தொழில் செய்வார்களா இருந்தால் உங்கள் தொழிலில் ஏதோ தடை இருந்தால் அந்தத் தடை படிப்படியாக குறைந்து நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களுக்கு நல்லது நடக்கும். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது திருமணமாகாமல் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும். கணவர் மனைவியாக இருந்தால் அவர்களுக்கு ஒற்றுமை அதிகரிக்கும் சந்தேகத்தன்மை குறைந்து மிகவும் நெருக்கமாக வாழ்வார்கள்.
படிப்பவர்களுக்கு மாரியம்மன் கனவில் வந்தால் நீங்கள் சரியாக படிக்காதவர்களாக இருந்தாலும் நீங்கள் இனிமேல் படிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
வேலைக்காக காத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு இந்த கனவு வந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அங்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.
மாரியம்மன் கோவில் கனவில் வந்தால்
மாரியம்மன் கோவில் கனவில் வந்தால் நீங்கள் பதற்றத்தன்மையில் இருந்திருந்தால் அது உங்களுக்கு நீங்கிவிடும் நீங்கள் மாரியம்மன் சாமிக்கு ஏதாவது வேண்டுதல் வைத்திருந்தால் அந்த வேண்டுதலை நீங்கள் செய்து விட வேண்டும். உங்களுக்கு திருமண தடை ஏதாவது இருந்தால் அந்த தடைகள் நீங்கி உங்களுக்கு விரைவில் திருமணம் நடந்து விடும். வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை விரைவில் கிடைக்கும். வீடு அல்லது இடம் பொருள் போன்றவைகளை வாங்க நினைப்பவர்களுக்கு அதை வாங்குவதற்கான சூழ்நிலைகள் தற்பொழுது கிடைக்கும்.
அம்மன் சிலை கனவில் வந்தால் என்ன பலன்
அம்மன் சிலை கனவில் வந்தால் அம்மனின் அருள் உங்களுக்கு கிடைக்கும். அம்மனால் பல நன்மைகள் உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்திற்கு ஏற்படும்.
அம்மனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவில் வந்தால்
அம்மனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவில் வந்தால் நமக்கு எந்த ஒரு தீமை இருந்தாலும் அது நீங்கிவிடும் எந்த ஒரு தீமையும் நம்மை நெருங்காது நமக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும்.
சாமி ஆடுவது போல் கனவில் வந்தால்
கனவு காண்பவர் சாமி ஆடுவது போல் கனவில் வந்தாலோ அல்லது பக்கத்தில் இருப்பவர் சாமி ஆடுவது போல் கனவில் வந்தாலோ எல்லாமே நல்லதுக்கு தான் பொதுவாக சாமி கனவில் வந்தாலே ஏதோ ஒரு நல்ல விஷயம் நமக்கு நடக்கப் போகிறது என்று அர்த்தமாகும். சாமி நம் கனவில் வந்தால் நமக்கு சாமியின் அருள் முழுவதுமாக கிடைக்கிறது.
கோவிலுக்கு செல்ல முடியாத போல் கனவில் வந்தால்
கோயிலுக்குள் செல்ல முடியாதது போல் கனவு வந்தால் உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை காத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு சிக்கல்களில் மாற்றிக் கொள்வீர்கள்.
கோயிலுக்குள் இருக்கும் பொழுது கோவில் கதவு சாத்துவது போல் கனவில் வந்தால்
கோவிலுக்குள் இருக்கும் பொழுது கோவில் கதவு சாத்துவது போல் கனவில் வந்தால் நீங்கள் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம் பணவரவுகள் குறைந்து கொண்டு வரும் உங்கள் தொழில்களில் ஏதாவது பிரச்சனையை ஏற்படும்.
சாமிக்கு மாலை போடுவது போல் கனவில் வந்தால்
உங்களது முயற்சியில் வெற்றி அடையலாம் கடவுள் எப்பொழுதுமே உங்கள் கூடவே இருப்பார்.
கோவில் கோபுரம் உங்கள் கனவில் வந்தால்
இதுவரைக்கும் உங்களுக்கு இருந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும். உங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். கடவுள் மீது நீங்கள் பக்தி வைத்திருந்தால் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போவீர்கள்.
திருநீர் இடுவது போல் கனவில் வந்தால்
திருநீர் இடுவது போல் கனவில் வந்தால் உங்களுக்கு நல்ல புத்தி மற்றும் ஞானம் கிடைக்கும். கடவுளின் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கும்.
முருகன் கனவில் வந்தால்
முருகன் சாமி உன் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு உள்ள தோஷங்கள் அனைத்து நீங்கி உங்களுக்கு உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
கடவுளுடன் பேசுவது போல் கனவில் வந்தால்
கடவுளுடன் பேசுவது போல் கனவில் வந்தால் உங்களது காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.
இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்–கனவு பலன்கள்