மருத்துவ காப்பீடு வகைகள் | Maruthuva Kapitu Thittam
வணக்கம் நண்பர்களே.!! ஒரு மனிதன் குழந்தையாக பிறந்ததிலிருந்து சாகும் வரை அவர்களுக்கு நோய் வருவது என்பது வழக்கமானது அந்த நோய்க்காக நம் நிறைய செலவு செய்திருப்போம் அந்த செலவுகளை குறைப்பதற்காக நமது நாட்டில் மருத்துவ காப்பீடு என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மருத்துவ காப்பீடு எந்தெந்த நோய்க்கு பயன்படுகிறது. மருத்துவ காப்பீடு பல வகைகள் இருக்கிறது.மருத்துவ காப்பிட்டு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
மருத்துவ காப்பீடு வகைகள்
மருத்துவ காப்பீடு ஐந்து வகைப்படும். இந்த ஐந்து வகையான மருத்துவ காப்பீட்டின் முழு விவரங்களை பற்றி நாம் பார்க்கலாம்.
1) பரிபூரண மருத்துவ காப்பீடு (Comprehensive health insurance)
2) மருத்துவ செலவு காப்பீடு (Mediclaim insurance)
3) விபத்து காப்பீடு (Personal Accident insurance)
4) பெரிய நோய்கள் காப்பீடு (critical illness insurance)
5) வருமான இழப்பு காப்பீடு (Hospital cashback insurance)
பரிபூரண மருத்துவ காப்பீடு (Comprehensive health insurance)
பரிபூரண மருத்துவ காப்பீடு என்றால் இப்பொழுது பெரும்பாலான நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது இந்த காப்பீடு தான் வழங்குகிறார்கள்.பரிபூரண மருத்துவ காப்பீட்டின் மூலம் நமக்கு என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.
பரிபூரண மருத்துவ காப்பீடு இருந்தால் நாம் மருத்துவமனை சேர்வதற்கு முன் மருத்துவமனையில் சேர்ந்த பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வாகனங்களின் வாடகை மற்றும் மருத்துவமனையில் ஐசியூவில் இருந்தால் அதற்கான செலவு என மொத்த செலவுகளும் இந்த காப்பீட்டில் அடங்கும்.
மருத்துவ செலவு காப்பீடு (Mediclaim insurance)
மருத்துவ செலவு காப்பீட்டின் மூலம் நமக்கு என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று பார்ப்போம். மருத்துவமனையில் இருக்கும் பொழுது ஏற்படும் செலவுகளை மட்டும் அதாவது மருத்துவமனைக்கு ஏற்படும் செலவுகளை மட்டும் இந்த காப்பீட்டின் மூலம் நமக்கு கிடைக்கும். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாகவும் மருத்துவமனை விட்டு வெளியே வந்த பின் மருத்துவ செலவு காப்பீடு திட்டம் நமக்கு செயல்படாது.
விபத்து காப்பீடு (Personal Accident insurance)
விபத்து காப்பீட்டின் மூலம் நமக்கு என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.நீங்கள் வாகனத்தில் வெளியே செல்லும் பொழுது அல்லது ஏதாவது ஒரு முறையில் உங்களுக்கு கை கால்கள் அடிபட்டு கை கால்களில் இருந்தாலும் அல்லது உடல் செயலிழந்து போனாலும் விபத்து காப்பீடு காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஒரு தொகை உங்களுக்கு கிடைக்கும்.
பெரிய நோய்கள் காப்பீடு (critical illness insurance)
பெரிய நோய்கள் காப்பீட்டின் மூலம் நமக்கு என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நோய் வருவதன் மூலம் பெரிய நோய்கள் காப்பீட்டு திட்டத்தில் இருந்து உங்களுக்கு நோய்க்கான மருத்துவமனை செலவுக்கான தொகையை கொடுப்பார்கள்.
பெரிய நோய்கள் காப்பீட்டு திட்டத்தை நீங்கள் எந்த ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை போடுவதாக இருந்தாலும் இதையும் அதனுடன் இணைத்து போடுவது மிகவும் நல்லது இது உங்களுக்கு கேன்சர் சர்க்கரை நோய் போன்றவற்றைகள் வரும்போது இந்த திட்டம் உங்களுக்கு உதவும்.
பெரிய நோய்கள் காப்பீடு திட்டத்தின் மூலம் நீங்கள் எந்த நோய்க்கு பெரிய நோய்கள் காப்பீட்டை போட்டு இருக்கிறீர்களோ அதற்கு மட்டும் தான்பெரிய நோய்கள் காப்பீடு திட்டம் பயன்படும்.
வருமான இழப்பு காப்பீடு (Hospital cashback insurance)
வருமான இழப்பு காப்பீட்டின் மூலம் நமக்கு என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.வருமான இழப்பு காப்பீடு திட்டத்தின் மூலம் நீங்கள் உங்களின் சராசரி வருமானம் எவ்வளவு என்று திட்டத்தை போடும்போது கூறிவிட்டால் நீங்கள் மருத்துவமனையில் நீங்கள் கூறிய வருமானம் நீங்கள் மருத்துவமனையில் தங்கி இருக்கும் நாள் வரை வருமான இழப்பு காப்பீடு திட்டத்தின் மூலம் கொடுப்பார்கள்.
அதாவது ஒரு நாளைக்கு ஆயிரம் 1000 என்று நீங்கள் கொடுத்திருந்தால் குறைந்தது ஒரு பத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்தீர்கள் என்றால் பத்து நாளுக்கான வருமானம் 10,000 ம் ரூபாய் உங்களுக்கு வந்து விடும்.
Read Also:
ரெனெர்வே பிளஸ் மாத்திரை பயன்கள்