தமிழில் மட்டும் இல்லாமல் இதை போன்ற மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரபாஸ்.இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் கதாநாயகனாக போற்றப்படும் நடிகர் ஆவார்.இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தந்தாலும் இவர் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கூட குறையாமல் இருக்கிறது.இந்த வகையில் தற்பொழுது பிரபாஸ் நடிகர் யாஸ் நடித்த கே ஜி எஃப் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தற்பொழுது நடித்திருக்கும் திரைப்படம் சலார்.
இந்த திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை சுருதிஹாசன் நடித்திருக்கிறார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிருத்திவிராஜ் திமிரு பட நடிகை ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலபேர் நடித்திருக்கின்றனர்.சலார் திரைப்படம் தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்து இந்த திரைப்படத்தை வரும் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டு இருக்கின்றனர்.
இந்தத் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் குறித்து அறிவிப்பு தற்பொழுது வெளியிட்டு உள்ளன இந்த திரைப்படத்தின் டீசர் வருகின்ற ஜூலை 6ஆம் தேதி காலை 5 மணி அளவில் வெளியாகும் என்று பட குழு அறிவித்து இருக்கிறது.இதனைத் தொடர்ந்து இந்த தகவலை பிரபாஸின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர்.
சமீபத்திய பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஆதி புரூஸ் என்ற திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டாலும் சில சர்ச்சைகளில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்த திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை செய்து அலகாபாத் நீதிமன்றம் படக்குழுவினருக்கு எதிராக சரமாரி கேள்விகள் எழுப்பி எச்சரித்ததோடு மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.மேலும் சலார் திரைப்படம் இவருக்கு ஒரு வெற்றி திரைப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.