Homeமருத்துவம்மாதுளை ஜூஸ் பயன்கள் | Mathulai Juice Benefits in Tamil

மாதுளை ஜூஸ் பயன்கள் | Mathulai Juice Benefits in Tamil

மாதுளை ஜூஸ் பயன்கள் | Mathulai Juice Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் மாதுளை பழத்தின் (mathulam palam) சாற்றில் இருக்கும் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.ஆரோக்கியமான பழச்சாறுகளும் பழங்களும் இருக்கின்றது.இது மட்டும் இல்லாமல் காய்கறி ஜூஸ்கள் மிகவும் பிரபலமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது.ஆனால் அதனை யாரும் அதிகம் குடிக்க விரும்ப மாட்டார்கள்.ஆனால் பழங்களினால் தயாரிக்கப்படும் ஜூஸ் அனைவரும் குடிப்பார்கள்.

- Advertisement -

ஏனென்றால் பழ  சாறுகள் ருசியாக இருக்கும்.அப்படிப்பட்ட மிகவும் சுவையான மற்ற ஆரோக்கியமான மாதுளை பழத்திலிருந்து எடுக்கப்படும் சாற்றை பற்றி பார்க்க இருக்கிறோம்.மாதுளை பழம்  (mathulam palam) அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு அற்புதமான பழமாகும்.இந்த மாதுளை பழத்தின் சாறு பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவியாக இருக்கிறது.சமீபத்தில் மாதுளை ஜூஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று இந்த பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

மாதுளை ஜூஸ் பயன்கள்
மாதுளை ஜூஸ் பயன்கள் – pomegranate juice benefits in tamil

மாதுளை பழ சாற்றில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்திருப்பது நாள் இது பல நோய்களை தடுக்க உதவியாக இருக்கிறது.அது மட்டும் இல்லாமல் மாதுளை பழம் ஜூசை (pomegranate juice benefits in tamil) தயாரித்த உடனே குடித்தால் இதனுடைய முழு நன்மைகளையும் பெற முடியும் என்றும் கூறுகின்றனர்.மேலும் மாதுளை பழம் சாற்றில் இருக்கும் பயன்களைப் பற்றி பார்ப்போம்.

புற்றுநோய் பிரச்சனை

மாதுளை பழம் சாற்றினை சாப்பிட்டால் பல்வேறு வகையான புற்றுநோய் மற்றும் கட்டிகளான ப்ரோஸ்டோ புற்றுநோய்,மார்பகப் புற்றுநோய் போன்றவற்றை தடுக்க உதவியாக இருக்கின்றது.மேலும் இந்த சாரில் புற்றுநோய் செல்களின் உற்பத்தியை முடக்க உதவுகிறது.

- Advertisement -

இதய நோய் பிரச்சனை

இந்த மாதுளை பழம் ஜூஸை குடித்தாள் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கிவிடும்.இதை இதய நோயின் ஆபத்தை குறைக்க உதவியாக இருக்கிறது.

- Advertisement -

ரத்த அழுத்தம்

இந்த மாதுளை பழம் ஜூஸை குடித்து வந்தால் ரத்த அழுத்தத்தை குறைத்து இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கவும் அதனை சீராக்கவும் உதவியாக இருக்கிறது.

சர்க்கரை நோய் பிரச்சினை

மாதுளை பழம் ஜூசை சாப்பிட்டால் சர்க்கரை நோய் பிரச்சனை தடுக்க பெரிதும் பயன்படுகிறது.சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் பிரச்சினை விரைவில் தீரும்.மேலும் இந்த பழத்தில் தயாரிக்கப்படும் ஜூஸை குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைப்பது மட்டும் இல்லாமல் டைப்  2 சர்க்கரை நோயை தடுக்க உதவியாக இருக்கிறது.

ரத்த சோகை

மாதுளம் பழ ஜூஸ் குடித்தால் ரத்தசோகை பிரச்சனை விரைவில் குணமடையும்.மாதுளை பழம் சாறில் அதிகம் போலெட் இருக்கின்றது.மேலும் இதில் அதிகம் இரும்பு சத்தும் இருப்பதனால் ரத்த சோகை நோயாளிகள் இதனை குடித்தால் விரைவில் குணமடையலாம்.மாதுளை பழம் ஜூஸில் இருக்கும் வைட்டமின் கே,ரத்தம் உறைவதை தடுக்கும் மற்றும் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவியாக இருக்கிறது.

மாதுளை ஜூஸ் பயன்கள்

சரும பிரச்சனை

மாதுளை பழம் சாற்றில் வைட்டமின் சி அதிகம் இருப்பதினால் சருமத்தை ஆரோக்கியமாகவும்,பளபளப்பாகவும்,இளமையாகவும் வைத்திருக்க உதவியாக இருக்கிறது.மேலும் இந்த ஜூஸில் ஆன்ட்டி ஏஜிங் பண்புகள் முதுமை செயல்முறையை தடுக்கும் .இந்த ஜூசை  தினமும் ஒருமுறை குடித்து வந்தால் தோல் சுருங்காமல் இருக்கும்.மேலும் புதிய செல்களை உருவாக்கும் பல்வேறு தோல் பிரச்சனைகள் மற்றும் நோய்களும் வராமல் தடுக்க உதவியாக இருக்கும்.இந்த ஜூஸை குடித்தால் பிம்பிள்,முகப்பருக்கள் மற்றும் தோல் வறட்சியை தடுக்க உதவியாக இருக்கிறது.

தலைமுடி பிரச்சனை

மாதுளை பழம் ஜூசை குடித்தால் அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான தலைமுடிகள் வளர உதவியாக இருக்கிறது.இந்த ஜூஸை தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை இருப்பவர்கள் இதனை குடித்து வந்தால் தலைமுடி பிரச்சினை தீரும்.மேலும் மயிர் கால்களை வலிமையாக்கி தலைமுடி உதிர் வதை தடுக்கவும் உதவியாக இருக்கிறது.இது தலை முடியின் வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் ஸ்கால்ப்பில் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க உதவியாக இருக்கிறது.

பற்கள் பிரச்சனை

மாதுளை ஜூஸில் இருக்கும் தனித்தன்மை பண்புகள் பற்களில் ப்ளேக் உருவாக்கத்தை தடுத்து பற்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது அது மட்டுமில்லாமல் பற்களை வலிமையாகவும் பாதுகாக்கிறது.உங்களுடைய பற்க்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால் இந்த மாதுளை ஜூசை தினமும் குடிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி

மாதுளை பழத்தின் ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கிறது.இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலை தாக்கும் நோய்களை எதிர்த்து போராடுகிறது.முக்கியமாக இதில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த உதவியாக இருக்கிறது.

செரிமான பிரச்சனை

மாதுளை பழம் ஜூஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதனால் ஆரோக்கியமான செரிமான செயல்பாட்டிற்கு உதவியாக இருக்கிறது.மாதுளை பழம் ஜூஸில் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதனால் உடலில் நார்ச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தையும் தடுக்க உதவியாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே..

பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் | Ponnanganni Keerai benefits in Tamil
ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள் | Apple cider vinegar
அவகோடா பழம் பயன்கள் | Avocado in Tamil
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR